தியேட்டர் அதிபர்கள் நஷ்டத்தை நடிகர்கள் ஈடுசெய்ய வேண்டும்.. மார்ச் 1 முதல் சினிமா தியேட்டர்கள் மூடல்?

கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி மாவட்ட தியேட்டர் அதிபர்கள் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் கோவையில் நேற்று நடந்தது.. பின்னர் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்க தலைவர் சக்தி சுப்பிரமணியம் பேட்டி அளித்தார். அப்போது கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பற்றி கூறியாதாவது:

பெரிய நடிகர்கள் நடித்த படங்கள் தோல்வி அடையும் போது திரையரங்க உரிமையாளர்கள் நஷ்டம் அடைகின்றனர். அந்த நஷ்டத்தை நடிகர், தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர்கள் இணைந்து ஈடுகட்ட வேண்டும் படம் வெளியாகி 100 நாட்களுக்குள் அமேசான், நெட்பிலிக்ஸ் போன்ற டிஜிட்டல் தளங்களில் படங்களை வெளியிடக் கூடாது.

தமிழக அரசின் 8% சதவீத மாநில வரியை வரும் பிப்ரவரி மாத்திற்குள் திரும்ப பெற வேண்டும். இல்லாவிட்டால் வரும் மார்ச் மாதம் 1ம் தேதி முதல் திரையரங்குகளை மூடுவது என கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக தெரிவித்தார்.

You'r reading தியேட்டர் அதிபர்கள் நஷ்டத்தை நடிகர்கள் ஈடுசெய்ய வேண்டும்.. மார்ச் 1 முதல் சினிமா தியேட்டர்கள் மூடல்? Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சியான் விக்ரம் 58வது பட டைட்டில் கோப்ரா.. வீடியோ வெளியிட்டு அறிவிப்பு..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்