கட்சி நடத்த சினிமாவில் சம்பாதிக்கிறேன்.. புதிய படங்களில் சரத்குமார் கவனம்..

சமத்துவ மக்கள் கட்சியை தலைவர் சரத்குமார் சமீபகாலமாக திரைப்படங்களில்மீண்டும் கவனம்செலுத்தத் தொடங்கி யிருக்கிறார். இதுபற்றி அவர் கூறியது:

சினிமா எனது தொழில் அரசியல் நான் மக்களுக்கு செய்யும் சேவை. அரசியல் பணிகளுக்கு இடையே இபோது படங் களிலும் நடிக்கிறேன். கட்சி நடத்துவது பெறும் பொறுப்பு அதை நடத்தவும் சினிமாவில் சம்பாதிக்க வேண்டி உள்ளது.

நானும் ராதிகாவும் இணைந்து“சூர்யவம்சம் படத்தில் நடித்தோம். அப்படம் வெளியாகி 20 ஆண்டு ஆகிறது. அதன் பிறகு இப்போதுதான் ராதிகாவுடன் வானம் கொட்டட்டும் படத்தில் இணைந்து நடிக்கிறேன் . இதையடுத்து பிறந்தாள் பராசக்தி என்ற படத்தில் ராதிகா, வரலட்சுமி ஆகியோ ருடன் இணந்து நடிக்கிறேன்.

ஜனவரி மாதம் இதன் படப் பிடிப்பு தொடங்குகிறது. மணிரத்னம் இயக்கும் பொன்னி யின் செல்வன் படத்தில் நடிக்கிறீர்களா என்கிறார்கள். நான் எந்த வேடத்தில் நடிக்கிறேன் என்பதை அவர்தான் சொல்ல வேண்டும். தமிழ் உள்ளிட்ட 3 மொழிகளில் உருவாகும் வெப் சீரியலிலும் நடிக்கிறேன்.

இவ்வாறு சரத்குமார் கூறினார்.

You'r reading கட்சி நடத்த சினிமாவில் சம்பாதிக்கிறேன்.. புதிய படங்களில் சரத்குமார் கவனம்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - வளைய சூரியகிரகணம்.. மோடிக்கு தெரியவிடாமல் மறைத்தது மேகக் கூட்டம்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்