குடியுரிமை திருத்த சட்டத்துக்கு கவுதமி ஆதரவு..

பாஜ அரசு நிறைவேற்றியுள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு எதிர்கட்சிகளும், மாணவர் மற்றும் இஸ்லாமிய அமைப்புகளும் நாடுமுழுவதும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

மக்கள் நீதி மய்யம் தலைவர், நடிகர் கமல்ஹாசன் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். ரஜினிகாந்த் இதுகுறித்து தகுந்த நேரத்தில் கருத்து தெரிவிப்பதாக கூறினார். குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவாக நடிகை கவுதமி கருத்துதெரிவித்துள்ளார்.

'குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து பல்வேறு போராட்டங்கள் நடத்தப்படுகிறது. ஆனால் குடியுரிமை சட்டத்தால் இந்தியர்கள் யாருக்கும் பாதிப்போ, பிரச்சினையோ ஏற்படாது. இதை மத்திய அரசு தெளிவாக கூறி உள்ளது.

அந்த உண்மையை புரிந்து கொள்ளாமல் சிலர் வேண்டு மென்றே கருத்துக்களை பரப்பி வருகின்றனர்' என்றார்.

You'r reading குடியுரிமை திருத்த சட்டத்துக்கு கவுதமி ஆதரவு.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - என் மாமாதான் எனக்கு உந்து சக்தி.. நடிகை கீர்த்தி மகிழ்ச்சி..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்