வருமானத்தை தவறாக வெளியிட்டதால் நோட்டீஸ் அனுப்பிய நடிகை.. பதில் சொல்லாவிட்டால் வழக்கு..

அமெரிக்காவை மையமாக கொண்டு இந்தியாவில் வெளியாகும் போர்ப்ஸ் இதழ் ஒவ்வொரு ஆண்டும் இந்திய பிரபலங்கள் 100 பேர்களின் வருமானத்தை 1 முதல் 100வரை வரிசைப்படுத்தி யார் முதலிடத்திலிருக்கி றார்கள் என்று பட்டியல் வெளியிட்டு வருகிறது.

இந்த ஆண்டு வெளியிட்ட பட்டியலில் இந்திய கிரிக்கெட் கேப்டன் வீராத் கோஹ்லி முதலிடம் பிடித்திருக்கிறார். அவருக்கு அடுத்தபடியாக நடிகர் அக்‌ஷய்குமார் 2வது இடம் பிடித்துள்ளார். 3வது இடத்தை சல்மான் கான் பிடித்திருக்கிறார். நடிகர் அமிதாப்பச்சன் 4வது இடத்தை பெற்றுள்ளார்
ரஜினிகாந்த் 13வது இடத்தை பிடிக்க நடிகர் விஜய் 47வது இடத்தில் உள்ளார்.அ

அவரையும்கடந்து நடிகர் கமல்ஹாசன் 56வது இடத்திலிருக்கிறார். இப்படி பட்டியல் நீள்கிறது. இதில் நடிகை கங்கனா ரனாவத் 70வது இடத்திலிருப்பதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த கங்கனாவின் சகோதரி ரங்கோலி சகட்டு மேனிக்கு பட்டியலிட்ட குழுவை வெளுத்து வாங்கியிருக்கிறார்.

'கங்கனாவின் வருமானம் எவ்வளவு என்பது அவருக்கே தெரியாது. அதை என் தலைமையிலான கணக்காளர் குழுதான் பராமரித்து வருகிறது. அவை எல்லாம் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. அதன் விவரத்தை பின்னர் கங்கனாவுக்கு சொல்வோம். அப்படியிருக்கும் போது கங்கனாவின் வருமானம் 17.5 கோடி என்று எங்கிருந்து உங்களுக்கு தகவல் வந்தது. எதன் அடிப்படையில் அதை குறிப்பிடுகிறீர்கள். இந்தமுறை வருமான வரித்துறைக்கே கங்கனா 17 கோடி வரி செலுத்தியிருக்கிறார்.

அப்படியிருக்கும்போது நீங்கள் குறிப்பிட்டிருக்கும் வருமானம் போலியானது. இதற்கு உடனடியாக விளக்கம் அளிக்க வேண்டும். இதுகுறித்து வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது. விரைவில் விளக்கம் தராவிட்டால் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என்றார் கங்கனா சகோதரி ரங்கோலி.

You'r reading வருமானத்தை தவறாக வெளியிட்டதால் நோட்டீஸ் அனுப்பிய நடிகை.. பதில் சொல்லாவிட்டால் வழக்கு.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - 2019ம் ஆண்டில் வெளியான 209 படங்கள் பட்டியல்.. இந்த வருடத்தின் சோகமும், மகிழ்ச்சியும்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்