ரஜினி கட்அவுட்டுக்கு ஹெலிகாப்டரில் மலர் தூவ தடை போலீஸ் அனுமதி மறுப்பு..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கும் படம் 'தா்பார்'. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி உள்ளார். இப்படம் நாளை (9ம் தேதி) திரைக்கு வருகிறது. போலீஸ் அதிகாரி ஆதித்ய அருணாச்சலம் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ரஜினியின் ஸ்டைலான நடிப்பு டிரெய்லரிலேயே பட்டய கிளப்பியது. இப்படத்துக் கான புரமோஷன்கள் சென்னை, மும்பை, ஐதராபாத்தில் நடந்தது. அதில் ரஜினியும் பங்கேற்றார்.

நாளை வெளியாகும் தர்பார் படத்திற்கு அப்படம் வெளியாகும் திரையரங்ககளில் கட் அவுட் வைப்பதற் கான ஏற்பாடுகளை ரசிகர்கள் செய்துள்ளனர். சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே ஏ.ஆா்.ஆா்.எஸ். திரையரங்கில் ரஜினியின் கட்அவுட் வைக்கப்பட்டது. தர்பார் முதல்காட்சி தொடங்கும்போது ஹெலிகாப்டரில் பறந்து வந்து ரஜினி கட் அவுட்டுக்கு மலா் தூவ முடிவு செய்தனர். அதற்கான அனுமதி கோரி சேலம் ஆட்சியா் அலுவலகத்தில் ரஜினி ரசிகா்கள் மனு கொடுத்தனர். ஆனால் பாதுகாப்பு கருதி தடையில்லா சான்றிதழ் வழங்கவில்லை.

இது பற்றி காவல் துணை ஆணையா் பி. தங்கதுரை கூறும்போது,' சேலத்தில் புதிய நிலையம் பகுதியில் மேம்பாலப் பணி நடப்பதால், போக்குவரத்துத் திருப்பி விடப்பட்டுள்ளது. அப்பகுதியில் ஹெலிகாப்டரில் ரஜினி கட்அவுட்டுக்கு மலா் தூவ அனுமதித்தால் போக்குவரத்து பாதிக்கும். எனவே தடையில்லா சான்றிதழ் வழங்கவில்லை என்றாா்.

'பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதைத் தவிர்க்கவும், சட்டம் ஒழுங்கு பாதுகாப்பை கருத்தில் கொண்டும் அனுமதி மறுக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியா் சி.அ. ராமன் தெரிவித்திருக்கிறார்.

You'r reading ரஜினி கட்அவுட்டுக்கு ஹெலிகாப்டரில் மலர் தூவ தடை போலீஸ் அனுமதி மறுப்பு.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - 130 கோடி மக்களின் எதிர்பார்ப்பு பட்ஜெட்.. பிரதமர் மோடி ட்விட்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்