விஜய் சேதுபதி பிறந்த நாளில் ரசிகர்கள் அசத்தல்.. ஒரேநாளில் 202 பேர் உறுப்புதானம்..

மக்கள் செல்வன் நடிகர் விஜய் சேதுபதி பிறந்தநாளை முன்னிட்டு உடல் உறுப்பு தானம் நிகழ்ச்சி திருச்சியில் நடந்தது. ரசிகர் நற்பணி இயக்க உறுப்பினர்கள் 202 பேர் தங்களது குடும்பத்தினரின் அனுமதி பெற்று திருச்சி ரசிகர் நற்பணி இயக்க அலுவலகத்தில் அரசு மருத்துவ மனைக்கு உடல் உறுப்புதான பிரிவு அதிகாரியிடம் உடல் உறுப்புதான சான்றிதழ்களை சமர்பித்தனர்.

தமிழ்நாட்டு கணக்கெடுப்பில் வருடாந்திர உடல் உறுப்பு தானம் செய்தவர்களில் 2016ம் ஆண்டில் அதிகபட்சமாக 185 பெயர் செய்திருந்தனர். இதுநாள்வரை தமிழ்நாட்டில் உடலுறுப்பு தானம் செய்தவர்கள் எண்ணிக்கை 1338. ஆனால் ஒரே நாளில் விஜய் சேதுபதி ரசிகர் நற்பணி நிர்வாகிகள் 202 நபர்கள் உடல் உறுப்பு தானம் செய்து மக்களின் உள்ளங்களை கொள்ளை கொண்டுள்ளனர்.

You'r reading விஜய் சேதுபதி பிறந்த நாளில் ரசிகர்கள் அசத்தல்.. ஒரேநாளில் 202 பேர் உறுப்புதானம்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - நான் ஈ நடிகருக்கு ஒன்றரை கோடி கார் பரிசு.. வீடு தேடி சென்று வழங்கிய ஹீரோ..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்