நடிகை அமலாபால் தந்தை திடீர் மரணம்.. அதோ அந்த பறவை போல பட ரிலீஸ் நேரத்தில் சோகம்..

நடிகை அமலா பால் சமீபத்தில் சென்னை வந்து அவர் நடித்த 'அதோ அந்த பறவை போல' பட டிரெய்லர் வெளியிட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அப்படத்தில் நடித்த அனுபவத்தை பகிர்ந்துகொண்டார். தனது வாழ்க்கையில் மறக்க முடியாத படமாகவும் இது இருக்கும். இப்படத் திற்காக கிராமகா என்ற மார்ஷல் ஆர்ட் சண்டை கலையை கற்றுக்கொண்டதாகவும், தனது வாழ்நாள் முழுக்க இந்த பயிற்சி தன்னை பாதுகாத்துக்கொள்ள உதவியாக இருக்கும் என்றும் மகிழ்சியாக தெரிவித்திருந்தார். அவரது மகிழ்ழ்சி சில் நாட்கள் கூட் நீடிக்கவில்லை.

அமலாபாலின் தந்தை பால் வர்கிஷ் உடல் நலம் பாதிக்கப்பட்டு கேரளாவில் உள்ள மருத்துவமனை யில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று திடீரென்று மரணம் அடைந்தார். தந்தை மறைவை அறிந்து அமலாபால் கதறி அழுதார். பால் வர்கிஸ் உடல் சொந்த ஊரான கேரளா மாநிலம் குருப்பம்பாடியில் உள்ள செயின் பீட்டர் மற்றும் செயின் பால் கத்தோலிக்க தேவாலயத்தில் சடங்கு இன்று மாலை இறுதி சடங்கு நடந்தது.

You'r reading நடிகை அமலாபால் தந்தை திடீர் மரணம்.. அதோ அந்த பறவை போல பட ரிலீஸ் நேரத்தில் சோகம்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - தளபதி விஜய், மாஸ்டர் அப்டேட்..  டீஸர்கூட ரிலீஸ் ஆகல, மாஸ்டர் பிஸ்னஸ் ஓவர்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்