ஹன்சிகாவுக்காக நடிக்க வந்த சிம்பு..

மணிரத்தின் செக்க சிவந்த வானம் படத்திற்கு பிறகு நடிகர் சிம்பு படப்பிடிப்பில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கியிருந்தார். வெங்கட்பிரபு இயக்கும் மாநாடு படத்தில் நடிப்பதாக இருந்து பிரச்னையால் தள்ளிப்போனது. தற்போது பிரச்னை தீர்ந்து அப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார்.

இதற்கிடையில் ஹன்சிகா நடிக்கும் மஹா படத்தின் படப்பிடிப்பில் சிம்பு கலந்துகொண்டு நடித்தார். இருவரும் படப்பிடிப்பில் பங்கேற்ற புகைப்பட காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையான மஹா படத்தில் ஹன்சிகா நடிக்கும்நிலையில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் சிம்பு. அவர் ஹன்சிகாவுடன் நடித்த காட்சிகள் படமாக்கப்பட் டன

இதனை அடுத்து அடுத்து வெங்கட் பிரபு இயக்கும் படத்தில் நடிக்கிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு சிம்பு படப்பிடிப்பில் பங்கேற்றதால் அவரது ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

You'r reading ஹன்சிகாவுக்காக நடிக்க வந்த சிம்பு.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - நித்யா மேனனுக்கு உடல்நலன் பாதிப்பு..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்