சிம்புவுக்கு முஸ்லிம் பெயர் வைத்த இயக்குனர்.. என்ன காரணம் தெரியுமா?

வாலு படத்தில் சிம்புவுடன் இணைந்து நடித்தார் ஹன்சிகா. அதன்பிறகு இருவருக்கும் ஊடல் ஏற்பட்டதையடுத்து ஜோடி சேராமல் இருந்தனர். நீண்ட வருடங்களுக்கு பிறகு மஹா படத்தில் சிம்புவுக்கு ஜோடியாகியிருக்கிறார் ஹன்சிகா. இது கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படமாக இருந்தாலும் சிம்புவுக்காக ஸ்பெஷல் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. இருவரும் நடித்த காதல் காட்சிகள் படமாக்கப்பட்டன.அவர்கள் ஜோடியாக இருக்கும் ஸ்டில்ஸ் வெளியாகி வைரலானது.

அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடுஎன்ற படத்தில் நடிக்கிறார் சிம்பு. இதில் அவரது கேரக்டர் பற்றி கூறும்போது, 'அப்துல் காலிக் என்ற கதாபாத்திரத்தில் சிம்பு நடிப்பதாக தெரிவித்து இருக்கிறார். சிம்புவின் பிறந்த தினத்தையொட்டி இந்த அறிவிப்பை செய்திருக்கிறார் வெங்கட்பிரபு. அதேநாளில் இவன்தான் உத்தமன் படத்துக்காக சிம்பு பாடிய டேய் மாமு என்ற பாடலை வெங்கட்பிரபு யூடிபில் வெளியிட்டார். . எஸ்.எஸ்.தமன் இசை அமைத்துள்ள இப்படத்தை மேக்வென் இயக்கி உள்ளனர். இதில் மஹத் ராகவேந்திரா, யாஷிகா ஜோடியாக நடித்துள்ளனர்.
சிம்புவின் பிறந்த தினத்தை அவரது தந்தை டி ராஜேந்தர், தாயார் உஷா ராஜேந்தர் மற்றும் குடும்பத்தினர் கேக் வெட்டி கொண்டாடினர்.

அவருக்கு திரையுலகினர், ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

You'r reading சிம்புவுக்கு முஸ்லிம் பெயர் வைத்த இயக்குனர்.. என்ன காரணம் தெரியுமா? Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - தனுஷ் 43 படத்தை இயக்கும் கார்த்திக் நரேன்.. கதாநாயகிக்கு வலைவீச்சு..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்