நடிகருக்கு கொரோனா வைரஸ் தாக்குதலா? கதறிய காமெடியன்..

போலீஸ்காரங்க வருவாங்க என்ன சொன்னேன்னு கேப்பாங்க ஒண்ணும் சொல்லிடாதீங்க... அடிச்சி கேப்பாங்க அப்பவும் சொல்லாதீங்க என்று நடிகர் வடிவேலுவை போலீசிடம் மாட்டிவிடும் காமெடி காட்சி உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்திருப்பவர் காமெடி நடிகர் போண்டா மணி.

படப்பிடிப்புக்கு வருவதும் தெரியாமல் ஷூட்டிங் முடிந்து போவதும் தெரியாமல் இருந்து வந்த போண்டா மணி பற்றி யாரோ வதந்தி கிளப்பிவிட்டனர். போண்டா மணிக்கு கொரோனா வைரஸ் காய்ச்சல் தாக்கியிருக்கிறது என நெட்டில் பரவவிட்டனர். அதைக்கண்டு ஷாக் ஆன நடிகர் போண்டா மணி.

'கொரோனா வைரஸ் பாதிப்பு எனக்கு இருப்பதாக வந்த செய்தி முழுக்க முழுக்க வதந்தி. உடல் நலத்துடன் இருக்கிறேன். தற்போது படப்பிடிப்பில் பங்கேற்று நடித்து வருகிறேன்' என தெரிவித்துள்ளார்.

You'r reading நடிகருக்கு கொரோனா வைரஸ் தாக்குதலா? கதறிய காமெடியன்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சிம்புவுக்கு முஸ்லிம் பெயர் வைத்த இயக்குனர்.. என்ன காரணம் தெரியுமா?

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்