நடிப்புக்கு முழுக்கு போட சமந்தா முடிவு.. காரணம் என்ன தெரியுமா?

நடிகை சமந்தா தமிழில் சூப்பர் டீலக்ஸ் படத்தில் கடைசியாக நடித்தார். அதன் பிறகு புதியபடம் எதுவும் தமிழில் அவருக்கு கைவசம் இல்லை. தமிழிலிருந்து தெலுங்கில் ரீமேக் ஆகும் 96 படத்தில் மட்டுமே நடித்து வருகிறார். இப்படத்துக்கு ஜானு என பெயரிடப்பட்டிருக்கிறது. வேறு படம் எதுவும் அவர் கைவசம் இல்லை.

இந்நிலையில்தான் தி பேமலி மேன் 2 என்ற வெப் சீரியலில் நடித்து வருகிறார்.
இதுபற்றி அவர் கூறும்போது,'வெப் சீரிஸில் முதன்முறையாக நான் வில்லி வேடத்தில் நடிக்கிறேன். என்னை புதிய சமந்தாவாக அதில் பார்க்கலாம். மேலும் டூப் போடாமல் நான் சண்டை காட்சிககளிலும் நடித்திருக்கிறேன். எனது ஆசை இதன் மூலம் நிறைவேறியிருக்கிறது' என்றார்.

மேலும் அவர் கூறும்போது, 'சினிமாவிலிருந்து விலகுவதற்கு முன் என்னை ரசிகர்கள் யாரும் மறக்க முடியாதளவுக்கு நிலைத்து நிற்கும் கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க வேண்டும் என்று எண்ணியிருந்தேன் அந்த வாய்ப்பு ஜானு (96 தமிழ் பட ரீமேக் )தெலுங்கு படத்தில் அமைந்திருக்கிறது. இது என் பெயரை நிலைநிறுத்தும். இன்னும் இரண்டு மூன்று ஆண்டுக்குள் நான் நடிப்பை நிறுத்திவிடுவேன் ' என சமந்தா தெரிவித்தார். இது அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

You'r reading நடிப்புக்கு முழுக்கு போட சமந்தா முடிவு.. காரணம் என்ன தெரியுமா? Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - நாகார்ஜூனா படப்பிடிப்பை பாதித்த கொரோனா வைரஸ்.. தாய்லாந்து ஷூட்டிங் கேன்சல்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்