இந்தியன் 2 விபத்தில் 3 சகாக்களை இழந்துவிட்டேன்.. கமல்ஹாசன் இரங்கல்..

கமல்ஹாசன் நடிக்க ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் இந்தியன் 2 படப்பிடிப்பில் நேற்று சென்னை அடுத்த செம்பம்பாகத்தில் உள்ள ஈவிபி ஸ்டுடியோவில் நடந்தது. இரவில் நடந்த படப்பிடிப்பின்போது கிரேன் அறுந்து விழுந்ததில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் 9 பேர் காயம் அடைந்தனர். இந்தச்சம்பவத்தையடுத்து இந்தியன் 2 படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

இந்த விபத்து பற்றி கமல்ஹாசன் கூறியதாவது:
எத்தனையோ விபத்துக்களைச் சந்தித்துக் கடந்திருந்தாலும் இன்றைய விபத்து மிகக் கொடூரமானது. மூன்று சகாக்களை இழந்து நிற்கிறேன். எனது வலியை விட அவர்களை இழந்த குடும்பத்தினரின் துயரம் பன்மடங்கு இருக்கும். அவர்களில் ஒருவனாக அவர்களின் துயரத்தில் பங்கேற்கிறேன். அவர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் உரியச் சிகிச்சை அளிக்கப்படுகிறது' என்றார்.

விபத்து நடந்தது எப்படி? என்று நேரில் பார்த்த காஸ்டியூம் டிசைனர் அமிர்தராம் கூறியதாவது:
விபத்து நடப்பதற்கு பத்து வினாடிகளுக்கு முன்புதான் அந்த இடத்திலிருந்து கமல்ஹாசன், காஜல் அகர்வால், நான் மூவரும் நகர்ந்து சென்றோம். அதன்பிறகு கிரேன் விழுந்து விபத்து ஏற்பட்டது. உயிரிழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அமிர்தராம் கூறினார்.,

இந்தியன் 2 பட தயாரிப்பு நிறுவனம் லைகா லைகா வெளியிட்டுள்ள அறிக்கையில்',சொற்களில் அடங்காத துயரம் இது. நேற்று இந்தியன் 2 செட்டில் எதிர்பாராமல் நடந்துவிட்ட விபத்தில் உதவி இயக்குநர் கிருஷ்ணா, கலை இயக்குநரின் உதவியாளர் சந்திரன், தயாரிப்பு உதவியாளர் மது ஆகிய கடும் உழைப்பாளிகளை இழந்துவிட்டோம். அவர்கள் குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You'r reading இந்தியன் 2 விபத்தில் 3 சகாக்களை இழந்துவிட்டேன்.. கமல்ஹாசன் இரங்கல்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கமல் நடிக்கும் இந்தியன் 2 படப்பிடிப்பில் பயங்கர விபத்து.. கிரேன் விழுந்து 3 பேர் பரிதாப பலி..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்