நடிகை வரலட்சுமி சரத் மீடூ புகார்.. சித்தி பாராட்டில் வரு..

போடா போடி படத்திலும், தாரை தப்பட்டை படத்திலும் கதாநாயகியாக நடித்த வரலட்சுமி பின்னர் சண்டக் கோழி 2, சர்க்கார் போன்ற படங்களில் வில்லியாக நடித்தார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், 'பட வாய்ப்பிற்காக,தன்னை இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் படுக்கைக்கு அழைத்ததாகப் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார். இது பரபரப்பானது.

சரத்குமார் மகள் என்று தெரிந்தும் அதுவும் சினிமாவில்பின்புலம் உள்ளவர் என்று தெரிந்தும் வரலட்சுமியிடம் இப்படி தவறான கண்ணோட்டத்தில் அணுகியது யார் என்ற கேள்வி எழுந்தது. துணிச்சலாக தனக்கு நேர்ந்த கதியைவெளியிட்ட வரலட்சுமிக்கு பாராட்டு குவிந்தது.

இதுகுறித்து சரத்குமாரின் மனைவியும், வரலட்சுமியின் சித்தியுமான ராதிகா தனது டிவிட்டர் பக்கத்தில் வரலட்சுமியைப் பாராட்டியிருக்கிறார். அவர் கூறும்போது, 'நன்றாக உன் கருத்தை வெளிப்படுத்தினாய். உனக்குள் அதிக உறுதி இருக்கிறது' எனத் தெரிவித்திருந்தார்.

You'r reading நடிகை வரலட்சுமி சரத் மீடூ புகார்.. சித்தி பாராட்டில் வரு.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சூர்யா-ஹரி பட டைட்டிலுக்கு சர்ச்சை.. ஒரே பெயரில் 3 படமா?

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்