குடித்துவிட்டு நடிகைக்கு லிப் டு லிப் கிஸ் அடித்த நடிகை.. ஆடையின்றி நடித்தவரின் அடுத்த அட்டகாசம்...

நடிகை அமலாபால் நாளுக்கு நாள் துணிச்சலுக்குப் பெயர் பெற்று வருகிறார். ஆடை படத்தில் ஒட்டுத் துணியின்றி நடித்து அதிர்ச்சி தந்தார்.

இந்நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நண்பர் தோழிகளுடன் நடத்திய பார்ட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவரது நடிகை தோழி ஒருவர் அழகாகப் பாடத் தொடங்க தூரத்தில் இருக்கும் அமலாபால் அவரை நெருங்கி வந்து கட்டிப் பிடித்துக்கொண்டு கன்னத்திலும் உதட்டிலும் முத்தம் கொடுத்துத் திணறடிக்கிறார். அதைக் கண்ட பலரும் போதை ஏறிப்போனா இப்படியா அலம்பல் என சரமாரியாக மெசேஜ் போட்டுக் கலாய்த்திருக்கின்றனர்.

ஏற்கெனவே நடிகை ரம்யாவுக்கு அமலாபால் லிப்லாக் கிஸ் தந்தது பரபரப்பாகப் பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.

You'r reading குடித்துவிட்டு நடிகைக்கு லிப் டு லிப் கிஸ் அடித்த நடிகை.. ஆடையின்றி நடித்தவரின் அடுத்த அட்டகாசம்... Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - வரலட்சுமி ஆன்ட்டி எனக் கிண்டலடித்த ரசிகர்.. நடிகை செம பதிலடி..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்