அரசியல் மாற்றத்துக்குச் சிறப்பான பேச்சு தலைவா.. பேட்ட இயக்குநர் போட்ட டிவிட்..

ரஜினிகாந்த் தனது அரசியல் நிலைப்பாடு குறித்து நேற்று அறிவித்தார். அப்போது,'எனக்கு முதல் அமைச்சர் ஆசை கிடையாது. கட்சி தொடங்கினாலும் கட்சிக்குத் தலைமை ஏற்றுவிட்டு முதல்வர் பதவிக்குப் படித்த, அன்புமிக்க, திறமைசாலியை முதல்வராக்குவேன்' எனக் கூறியிருந்தார். ரஜினியின் இந்த பேச்சு குறித்து பல்வேறு அரசியல் தலைவர்கள் நடிகர், நடிகைகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ரஜினி நடித்த பேட்ட படத்தை இயக்கிய கார்த்திக் சுப்பராஜ், 'தெளிவான பார்வை, புது கொள்கை, தன்னிலமற்ற தன்மை, இதயத்திலிருந்து வெளிப்படையாக. இது தான் தலைவரின் அரசியல். சிறப்பான பேச்சு தலைவா. அரசியல் மாற்றத்துக்கான எங்களின் நம்பிக்கை. இப்ப இல்லைனா எப்பவும் இல்ல' என்று ரஜினியின் அரசியல் பேச்சு குறித்துக் கூறி உள்ளார்.

You'r reading அரசியல் மாற்றத்துக்குச் சிறப்பான பேச்சு தலைவா.. பேட்ட இயக்குநர் போட்ட டிவிட்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கபில்தேவ் ஆன நடிகர்.. கெட்டப் எப்படி?

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்