வருமான வரித்துறை ரெய்டு பற்றி விஜய் பரபரப்பு.. எனக்கு மக்கள் ஆதரவு வேற லெவல்..

தளபதி விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் விஜய் பேசியதாவது:

ரசிகர்கள் இல்லாமல் இந்த விழா நடத்த அரைமனதோடு தான் ஒப்புக்கொண்டேன். மாஸ்டர் படத்தை இயக்கும் லோகேஷ் வங்கியில் வேலை செய்து கொண்டிருந்தார். பின்னர் மாநகரம் படம் இயக்கினார். அது கடினமான கதை நன்றாக இயக்கி பார்க்க வைத்தார். கைதி படத்தைத் திரும்பத் திரும்ப பார்க்கவைத் தார். மாஸ்டர் படத்தை என்ன செய்திருக்கிறார் என்பதைப் பார்க்க ஆவலாக இருக்கிறேன். படத்துக்கு பிளான் செய்வார்கள். லோகேஷ் மாஸ்டர் பிளான் செய்திருக்கிறார். கடினமான உழைப்பும் ஸ்மார்ட்டான வேலையும் செய்தால் சீக்கிரமா ஜெயிக்கலாம். படம் பார்த்து விட்டு நீங்கள் சொல்லுங்கள் மாஸ்டர் என்ன செய்திருக்கிறார் என்பதைப் பார்க்க ஆவலாக இருக்கிறேன். இப்படத்தில் விஜய்சேதுபதி வில்லனாக எப்படி நடிக்க ஒப்புக் கொண்டார்? அவருக்கென்று ஒரு மார்க்கெட் இருக்கும்போது இதெப்படி நடந்தது என்பதை அவரிடமே கேட்டேன். உங்க மேல் இருக்கும் அன்புதான் என்று நான்கே வார்த்தையில் பதில் சொல்லிவிட்டுச் சிரித்தார். அப்பத்தான் எனக்கு பேர்ல மட்டுமில்லை மனசுலயும் இடங்கொடுத்திருக்கிறார் என்று நினைத்தேன். கத்தி படத்துக்குப் பிறகு அனிருத் மீண்டும். மாஸ்டரில் என்னுடன் இணைந்திருக்கிறார். கெத்தா வேலை செய்திருக்கிறார். கதாநாயகி மாளவிகா இன்னும் தமிழ் பேச கற்றுக்கொண்டால் எதிர்காலத்தில் நல்லதொரு இடத்தை பிடிப்பார். இப்படத்தின் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ நான் முன்பு நடித்த தேவா, ரசிகன், செந்தூரப்பாண்டி ஆகிய படங்களுக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் உதவிருக்கிறார். அதனால் தான் அவருக்கு இந்த மாஸ்டர் படத்தில் நடிக்கிறேன்.
இந்த இடத்தில் ஒரு குட்டி கதை சொல்கிறேன். வாழ்க்கை ஒரு நதி போன்றது. சிலர் மலர் தூவுவார்கள், சிலர் விளக்கு ஏற்றுவார்கள், பிடிக்காதவர்கள் சிலர் கல் எறிவார்கள். ஆனால் நதி சென்றுகொண்டே இருக்கும். அதுபோல் என் வாழ்க்கையும் சென்று கொண்டிருக்கிறது.

நெய்வேலியில் இப்படத்தின் படப்பிடிப்பில் நடந்த சம்பவத்தின்போது (வருமான வரித்துறை ரெய்டு ) எனக்கு ஆதரவு தெரிவித்து மக்கள் கூடியது பற்றிக் கேட்கிறார்கள். அப்போது எனக்கு ஏற்பட்ட உணர்வு வேற லெவல். உண்மையாக இருக்கலாம். சில சமயம் ஊமையாக இருந்து விடுவது நல்லது.
இவ்வாறு விஜய் பேசினார்.

You'r reading வருமான வரித்துறை ரெய்டு பற்றி விஜய் பரபரப்பு.. எனக்கு மக்கள் ஆதரவு வேற லெவல்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கொரோனா தடுப்பு பணிக்கு ரூ.60 கோடி உடனடி ஒதுக்கீடு.. முதல்வர் அறிவிப்பு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்