அஜீத் படத்தில் ரஜினி நாயகி.. புல்லட் ஓட்டி நடித்தார்..

அஜித்குமார் நடித்த நேர் கொண்ட பார்வை படத்தை இயக்கியவர் எச்.வினோத். இந்த கூட்டணி தற்போது வலிமை கூட்டணியில் இணைந்திருக்கிறது. போனிகபூர் தயாரிக்கிறார். வலிமை படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் அஜீத். இதன் படப்பிடிப்பு ஐதராபாத், சென்னையில் நடந்தது. இதில் கதாநாயகியாக யார் நடிக்கிறார்கள் என்பது பற்றி குழப்பம் நிலவி வந்தது. நயன்தாரா, இலியானா, பரிணிநிதி சோப்ரா, யாமி கவுதம் என பல பெயர்கள் அடிபட்டன. கடைசியாகக் காலா படத்தில் நடித்த ஹுமா குரோஷி பெயரும் அடிபட்டது. தற்போது அவர்தான் கதாநாயகியாகத் தேர்வாகி நடித்து வருகிறார்.

இரண்டு வாரங்களுக்கு முன் அஜீத்குமார் பைக் ரேஸில் பாய்ந்து சென்று எதிரிகளுடன் மோதிய சண்டைக் காட்சி படமாக்கப்பட்டது. இதில் தவறி விழுந்ததில் அவருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டது.

அஜீத்தைப் போலவே ஹுமா குரோஷியும் புல்லட் மோட்டார் சைக்கிள் ஓட்டிய காட்சிகளை இயக்குநர் படமாக்கினார். ஹெல்மெட் அணிந்து கொண்டு டிராபிக் நிறைந்த பகுதிகளில் அவர் புல்லட் ஓட்டிச் சென்ற காட்சிகள் படமாக்கப்பட்டன. முன்னதாக படத்தின் பூஜை போடப்பட்டு 1 மாதத்துக்குப் பிறகு தாமதமாக தொடங்கிய படப்பிடிப்பு இடையில் மிகவேகமாக நடைபெற்று வந்தது. தற்போது கெரரேனா வைரஸ் பாதிப்பு காரணமாகப் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

You'r reading அஜீத் படத்தில் ரஜினி நாயகி.. புல்லட் ஓட்டி நடித்தார்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கொரோனா வைரஸ் எதிர்க்கப் பிரபு தேவா நடிகை ஐடியா.. உடற்பயிற்சி செய்யத் தவறாதீர்கள்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்