கொரோனா தாக்குதலில் அவெஞ்சர்ஸ் நடிகர்.. தொற்று உள்ளது அறிகுறி இல்லை..

சர்வதேச அளவில் வசூலை அள்ளிக்குவித்த ஹாலிவுட் படம் 'அவெஞ்சர்ஸ் இன்பினிட் வார் படத்தில் நோர்ஸ் கதாபாத்திரத்தில் இட்ரிஸ் எல்பா நடித்திருக்கிறார். கொரேனா வைரஸ் பரிசோதனை செய்துகொண்ட போது அவருக்கு கொரோனோ தொற்று இருப்பது தெரிய வந்தது.

ஆனாலும் அது குறித்துக் கவலைப்படாமல் எல்பா ஒரு மெசேஜ் வெளியிட்டுள்ளார். அதில்,'இன்று காலை நான் கோவிட் 19 (கொரேனோ வைரஸ்) பரிசோதனை மேற்கொண்டபோது எனக்குத் தொற்று இருப்பதாக பாசிடிவ் ரிப்போர்ட் வந்தது. ஆனாலும் நான் நன்றாகத்தான் இருக்கிறேன். இதுவரை தொற்றுக்கான அறிகுறி எதுவும் இல்லை. ஆனாலும் என்னை நான் தனிமைப்படுத்திக்கொண்டிருக்கிறேன். மக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே இருங்கள், நடைமுறையில் மாற்றத்தைக் கொண்டு சுத்தமாக இருக்க பழகுங்கள். என்னைப்பற்றிய உடல்நிலை குறித்து அவ்வப்போது ரசிகர்களுக்கு தெரிவிக்கிறேன். யாரும் பயப்பட வேண்டாம்' எனத் தெரிவித்திருக்கிறார்.

You'r reading கொரோனா தாக்குதலில் அவெஞ்சர்ஸ் நடிகர்.. தொற்று உள்ளது அறிகுறி இல்லை.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - அரசு, தனியார் ஊழியர்கள் வீட்டிலிருந்தபடி வேலை.. மு.க.ஸ்டாலின் கோரிக்கை

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்