மாஸ்டர் திட்டமிட்டபடி ரிலீஸ்.. கொரேனோ வைரஸ் பயம் இல்லை..

கொரோனோ வைரஸ் தாக்குதலால் உலக நாடுகளில் பீதி நிலவி வருகிறது. இந்தியாவிலும் கொரோனோ ஊடுருவியதையடுத்து சினிமா அரங்குகள், வர்த்தக மால்கள், ஐடி அலுவலகங்கள் மூடப்பட்டிருக்கின்றன. மார்ச் 19ம் தேதி முதல் தமிழ்த் திரைப்படங்களின் படப்பிடிப்புகள் நிறுத்தப்படுகின்றன. சினிமா திரை அரங்குகளும் மூடப்படுகின்றன. இதனால் மார்ச் 13ம் தேதி மற்றும் 20ம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டிருந்த புதிய படங்கள் வெளியீடு பாதிக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில், வைரஸ் பாதிப்பால் ரிலீஸ் செய்யப்படாமல் நிறுத்தப்படும் படங்களுக்கு மீண்டும் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டவுடன் அப்படங்களை ரிலீஸ் செய்ய முன்னுரிமை அளிக்க வேண்டும் எனத் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு பட அதிபர்கள் சிலர் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.

இந்நிலையில் விஜய் நடித்திருக்கும் மாஸ்டர் படம் வரும் ஏப்ரல் 9ம் தேதி ரிலீஸ் செய்வ தாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல் சூர்யா நடிக்கும் சூரரைப்போற்று படமும் ரிலீஸ் அறிவிக்கப்பட்டிருந்தது. அப்படங்களும் தள்ளிப்போகும் என்று கூறப்பட்டது. ஆனால் மாஸ்டர் படம் திட்டமிட்டபடி ரிலீஸ் ஆகும் என்று படத் தரப்பினர் தெரிவித்திருக்கின்றனர்.

இதுபற்றி பட தரப்பில் கூறும் போது,'பட ரிலீஸ் நிறுத்தம், படப்பிடிப்பு நிறுத்தம் போன்ற வை இம்மாதம் 31ம் தேதி வரை நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் மாஸ்டர் படம் ஏப்ரல் மாதம் 9ம் தேதி ரிலீஸ் என்றுதான் அறிவிக்கப்பட்டிருக்கிறது. திட்டமிட்டபடி படத்தை ரிலீஸ் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன' என்றனர்.

You'r reading மாஸ்டர் திட்டமிட்டபடி ரிலீஸ்.. கொரேனோ வைரஸ் பயம் இல்லை.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - இளம் நடிகருடன் யாஷிகா லவ்வா? தம்பி ராமையா கதறல்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்