செல்வமணியிடம் தொழிலாளி கண்ணீர் கொரோனாவால் செத்தாலும் பரவாயில்லை.

RK Selvamani request Actors to help FEFSI members

கொரோனா வைரஸ் பாதிப்பால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இதனால் தொழில்கள் முடங்கி உள்ளன. பல நிறுவனங்கள் மூடப்பட்டிருக்கின்றன. குறிப்பாக பல கோடிகள் தினமும் புழங்கும் சினிமா தொழில் முற்றிலுமாக முடங்கியிருக்கிறது.
கொரோனா தொற்று பரவாமலிருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வரும் 31ம் தேதி வரை அனைத்து படப்பிடிப்பு மற்றும் தொழில்நுட்ப வேலைகளை நிறுத்தி வைக்க வேண்டும் என பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி அறிவித்துள்ளார் .
நட்சத்திரங்கள் பலர் கோடிகளில் புழங்கினாலும் சினிமா தொழிலாளர்களில் பலர் அன்றாடங்காய்ச்சிகளாகவே உள்ளனர். தினக் கூலியாக குடும்பம் நடத்தி வரும் பெப்சி தொழிலாளர்கள் பலரது குடும்பம் பட்டினியால் வாடத் தொடங்கியிருக்கிறது.
அப்படி பாதிக்கப்பட்ட தொழிலாளர்களில் ஒருவர், செல்வமணியிடம் வந்து 'ஐயா, நான் வேலைக்குப்போய் செத்தா கூட பரவாயில்லை. என்குழந்தைகள் சாப்பாடு இல்லாமல் சாவதைவிட நான் கொரோனாவால் செத்தால் பரவாயில்லை' என்றார்.
எனவே தொழிலாளர்களுக்கு உதவு நட்சத்திரங்களிடம் செல்வமணி உதவி கேட்டிருக்கிறார். இதையடுத்து சிவகுமார், சூர்யா, கார்த்தி குடும்பம் சார்பில் 10 லட்சம் வழங்கப்பட்டிருக்கிறது. நடிகர் சிவகார்த்திகேயன் 10 லட்சம் வழங்கி உள்ளார்.
மேலும் பல நட்சத்திரங்கள் உதவி வருகின்றனர்

You'r reading செல்வமணியிடம் தொழிலாளி கண்ணீர் கொரோனாவால் செத்தாலும் பரவாயில்லை. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கமல் முயற்சியை கையிலெடுக்கும் இளம் இயக்குனர்.. எதிர்ப்பு வருமா?..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்