யோகிபாபுவின் திருமண வரவேற்பு ரத்தா? டிவிட்டரில் புலம்பும் நடிகர்..

Is Yogi Babu cancelling his wedding reception due to coronavirus outbreak?

ரஜினிகாந்த். விஜய் என எல்லா முன்னணி நடிகர்களுடன் நடித்து குறுகிய காலத்தில் புகழின் உச்சிக்கு வந்தவர் யோகி பாபு. இவரது திருமணம் ரகசியமாக கடந்த 2 மாதத்துக்கு முன் நடந்தது. ஏப்ரல் மாதம் திருமண வரவேற்பு நிகழ்ச்சியை பிரமாண்டமாக நடத்த உள்ளதாக தெரிவித்தார்.அதன்படி ஏப்ரல் 9ம் தேதி திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து முதல்வர் முதல் எல்லா விஐபிக்களுக்கும் அழைப்பிதழ் கொடுத்தார். ஆனால் திருமண வரவேற்பு நடக்குமா என்று சந்தேகம் எழுந்துள்ளது. கொரோனா தொற்றால் ஊரடங்கு தடை பிறப்பிக்கப்பட்டுள்ளதால் இந்த கேள்வி எழுந்திருக்கிறது.

இது குறித்து டிவிட்டரில் தெரிவித்துள்ள யோகிபாபு. திருமண வரவேற்பு ஏப்ரல் 9ம் தேதி பிரமாண்டமாக நடத்த ஏற்பாடு செய்தேன் இப்போதுள்ள சூழலில் என்ன நடக்கும் என்று தெரியவில்லை என கூறியிருக்கிறார்.

You'r reading யோகிபாபுவின் திருமண வரவேற்பு ரத்தா? டிவிட்டரில் புலம்பும் நடிகர்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கொரோனா பீதியில் பிருத்விராஜ் நடத்திய ஷூ்ட்டிங்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்