ஒரு குட்டி ஸ்டோரிக்கு 40 மில்லியன் பார்வை..

Oru Kutti Story Song Reaches 40 million views on YouTube

தளபதி ரசிகர்கள் உற்சாகம்..

விஜய், தனுஷ் அவ்வப்போது தங்கள் பாடல்களைச் சொந்த குரலில் பாடுகின்றனர். தற்போது சூர்யா, சிவகார்த்திகேயன் போன்றவர்களும் சொந்த குரலில் பாட முயற்சிக்கின்றனர். மாரி 2 படத்திற்காக தனுஷ் பாடிய ரவுடி பேபி பாடல் யு டியூபில் வெளியாகி 800 மில்லயன் பார்வையாளர்களைப் பெற்று சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.மாஸ்டர் படத்தில் அனிருத் இசையில் விஜய் பாடிய ஒரு குட்டி ஸ்டோரி தற்போது யூ டியூபில் தனது சாதனை கணக்கைத் தொடங்கியிருக்கிறது. இதுவரை 40 மில்லியன் பார்வையாளர்கள் பெற்றிருப்ப தாக இப்பத்தின் ஆடியோவை வெளியிட்டுள்ள சோனி மியூசிக் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த தகவலைத் தளபதி ரசிகர்கள் நெட்டில் உற்சாகமாக கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர்.

You'r reading ஒரு குட்டி ஸ்டோரிக்கு 40 மில்லியன் பார்வை.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - அசுர நடிகையின் தாராளம்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்