ஹாலிவுட் நடிகர் கொரோனா பாதிப்பில் மரணம்..

Popular Hollywood actor dies of coronavirus infection

ஹவ் ஹீ ஃபெல் இன் லவ், நோ பே, நியூடிட்டி, காய்ன் ஹெயிஸ்ட், லவ் ஈஸ் பிளைண்டு உள்ளிட்ட பல்வேறு ஹாலிவுட் படங்களில் நடித்ததுடன் யூ, எலிமென்ட்ரி, சக்ஸசன் உள்ளிட்ட பல்வேறு டிவி சீரியல்களிலும் நடித்திருப்பவர் மார்க் ப்ளும்.

இவர் கொரேனா வைரஸ் நோய்த் தொற்றில் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனில்லாமல் நேற்று இறந்தார். அவருக்கு வயது 69.மார்க் ப்ளும் மறைவுக்குத் திரைப்பட நடிகர்கள் கில்ட் துணைத் தலைவர் ரெப்பெக்கா டாமன் இரங்கல் தெரிவித்திருக்கிறார். அதில், ' மார்க் பளும் கொரேனா வைரஸ் பாதித்து மறைந்தது பெரும் சோகத்தை அளித்துள்ளது. அவர் என்றைக்கும் எங்கள் நினைவில் பொக்கிஷம் போல் வாழ்ந்துகொண்டிருப்பார். என்றைக்கும் அவர் உண்மைதான் பேசுவார். எல்லோரிடமும் கலகலப்பாகப் பழகுவார். அவர் நடிகர்களில் உண்மையானவர். அவரை இழந்து ரொம்பவே வாடுகிறோம். அவருக்கு எங்களது அஞ்சலி. அனைவரும் கொரானா தொற்று முடியும் வரை வீட்டிலேயே இருங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்' என குறிப்பிட்டிருக்கிறார்.

You'r reading ஹாலிவுட் நடிகர் கொரோனா பாதிப்பில் மரணம்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஒரு குட்டி ஸ்டோரிக்கு 40 மில்லியன் பார்வை..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்