விஷ்ணு விஷால் பிரிவால் வாடும் காதலி..

Corona Social Distancing: Juwala kattaa Missing Actor Vishnu Vishal

நடிகரின் பொறுப்பான பதில்..

கொரோனா வைரஸ் தொற்று எல்லோரையும் வீட்டில் கட்டிப்போட்டு வைத்திருக்கிறது. சினிமா நட்சத்திரங்களும் படப்பிடிப்பு இல்லாமல் வீட்டில் பொழுதைக் கழித்து வருகின்றனர். விஷ்ணு விஷால் ஏற்கெனவே எப் ஐ ஆர் என்ற படத்தை முடித்திருக்கிறார். அடுத்து தமிழில் ரீமேக் ஆகும் தெலுங்கு படம் ஜெர்சியில் நடிக்கிறார்.

நடிகர் விஷ்ணு விஷாலின் கேர்ள் பிரண்ட் ஜுவாலா கட்டா. பேட்மிண்டன் வீராங்கனையான இவர் தனது இணையதள பக்கத்தில் விஷ்ணுவுடன் ஜோடியாக இருக்கும் படத்தை வெளியீட்டு, ' விஷ்ணு செல்லமே உன்னை ரொம்பவே மிஸ் செய்கிறேன்' என ஏக்கமாக தெரிவித்துள்ளார். அதற்குப் பொறுப்பாகப் பதில் அளித்திருக்கும் விஷ்ணு 'இப்போது சமூக இடை வெளிக்கான நேரம். பாதுகாப்பாக இருப்போம் அனைவருக்காகவும் பிரார்த்திப்போம்' எனத் தெரிவித்துள்ளார்.

You'r reading விஷ்ணு விஷால் பிரிவால் வாடும் காதலி.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஏ. ஆர்.முருகதாஸுக்கு பாதி சம்பளம் தான்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்