சொந்த ஊரில் துப்புரவுப் பணியாளர் ஆன ஹீரோ..

Actor Vimal Transformed As Scavenger

கொரோனா வைரசைத் தடுக்க 21 நாட்கள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைக்குத் தவிர யாரும் வீட்டை விட்டு வெளியில் வருவது கிடையாது.


நடிகர், நடிகைகள் வீட்டிலிருந்தாலும் கொரோன தொற்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். ஆனால் நடிகர் விமல் களத்திலிறங்கி துப்புரவு பணி செய்யத் தொடங்கி விட்டார்.மணப்பாறையை அடுத்துள்ள பின்னங்காம்பை கிராமத்தைச் சேர்ந்தவர் விமல். அவர் சென்னையிலிருந்து சொந்த ஊருக்குப் புறப்பட்டுச் சென்றார். அங்குள்ள இளைஞர்களுடன் சேர்ந்து துப்புரவு பாணியில் ஈடுபட்டார். தோளில் கிருமி நாசினி எந்திரத்தை மாட்டிக் கொண்டு தெருத் தெருவாகச் சென்று கிருமி நாசினி தெளித்தார்.
கொரோனா ஒழிப்பு பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட விமலுக்குப் பாராட்டு குவிந்து வருகிறது.

You'r reading சொந்த ஊரில் துப்புரவுப் பணியாளர் ஆன ஹீரோ.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கமல் வீட்டில் நோட்டீஸ் ஒட்ட கவுதமி காரணம்?

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்