நர்ஸாக மாறிய பிரபல நடிகை..

Actress Turns Nurse To Fight Corona Vairus

கொரோனா விரட்டும் சேவையில் இணைந்தார்..

பாலிவுட் நடிகர் ஷாருக்கானுடன் பேன் (fan) படத்தில் நடித்தவர் ஷிஹா மல்ஹோத்ரா. இவர் டெல்லியில் உள்ள வர்தாமன் மஹாவீர் மெடிக்கல் காலேஜில் நர்சிங் படிப்பு படித்து டிகிரி பெற்றவர். கொரோனோ வைரஸ் பரவலில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்.நடிக்க வருவதற்கு முன் ஏற்கெனவே தான் பணியாற்றி மருத்துவமனையில் நர்ஸாக சேர்ந்து கொரோனா வைரஸ் தடுப்பு பிரிவில் பணியாற்றத் தொடங்கி இருக்கிறார். அவரது சேவையைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.

நர்ஸ் யூனிபார்ம் அணிந்து ஷிஹா பணியாற்றும் படத்தைத் தனது இணையதள பக்கத்தில் வெளியிட்டிருப்பதுடன் அவர், 'நம் மக்களைப் பாதிக்கும் கொரோனா வைரஸ் கிருமி ஒழிப்பில் என்னை மனமுவந்து ஈடுபடுத்திக் கொண்டேன். நடிக்க வந்தபோது எனக்கு ஆதரவு அளித்து ரசிகர்களுக்கு நன்றி. இப்போது என்னுடைய சேவை நோயுற்ற மக்களுக்குத் தேவைப்படுகிறது. இப்பணியில் என்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்வேன் ' எனத் தெரிவித்துள்ளார்.

You'r reading நர்ஸாக மாறிய பிரபல நடிகை.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - தமிழகத்தில் இது வரை 67 பேருக்கு கொரோனா..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்