முதன் முறையாகச் சமையலறைக்குள் நுழைந்த ஆண்ட்ரியா.. யூ டியூப் பார்த்துச் சமைக்கக் கற்றார்..

Actor-singer Andrea Jeremiah tries her hand at cooking

கொரொனா வைரஸ் நடிகர், நடிகைகளை வீட்டிற்குள் முடக்கிப்போட்டிருக்கிறது. ஒவ்வொருவரும் சமையல் செய்வது, பாத்திரம் கழுவுவது, உடற்பயிற்சி செய்வது என வேலை பார்த்துக்கொண்டிருக்கின்றனர். இதில் சிறப்பு என்னவென்றால் சமையல்கட்டு பக்கம் போகாமல் இருந்த நடிகைகளும் சமையல் செய்யக்கற்று வருகின்றனர்.

குறிப்பாகச் சமையல்கட்டு எந்தப் பக்கம் இருக்கிறது என்று தெரியாமல் பிஸியாக சுற்றிக்கொண்டிருந்த நடிகை ஆண்ட்ரியா முதன்முறையாகச் சமையல் கட்டு பக்கம் சென்றிருப்பதுதான். இதுபற்றி அவரே கூறியிருக்கிறார்.கொரொனா ஊரடங்குக்கு ஒரு நன்றி. முதன் முறையாக நான் எனக்குச் சமைப்பதற்காகச் சமையல் அறைக்குள் சென்றேன். நெட்டில் ரெஸிப்பி பார்த்துச் சமைத்தேன். பாஸ்த்தா, கிரீன் ஆப்பிள் ஜூஸ் என 5 வகையான உணவு சமைத்தேன். என் கையால் சமைத்ததை நானே சாப்பிட்டேன். சமையல் செய்யும்போதுதான் அது எவ்வளவு அன்பான வேலை என்பதைத் தெரிந்துகொண்டேன். எல்லோருக்கும் வீட்டில் சமைக்கும் பெண்கள் எல்லோருக்கும் எனது நன்றி.


இவ்வாறு ஆண்ட்ரியா கூறி உள்ளார்.

You'r reading முதன் முறையாகச் சமையலறைக்குள் நுழைந்த ஆண்ட்ரியா.. யூ டியூப் பார்த்துச் சமைக்கக் கற்றார்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - தனிமையில் தவிக்கும் அஜீத் பட நடிகை.. டிக்டாக் செய்யத் தெரியாமல் விழிக்கிறார்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்