ஆங்கில, சூப்பர் கேர்ள் நடிகைக்கு கொரோனா வைரஸ்.. நெஞ்சு வலியால் அவதி..

Coronavirus Outbreak: Olivia Nikkanen, known for The Society, Supergirl

ஆங்கில டிவி சீரியல் சொசைட்டி மற்றும் சூப்பர் கேர்ள் ஆகிய வெப் சீரியலில் நடித்துப் பிரபலமானவர் ஒலிவியா நிக்கனேன். 21 வயதே ஆகும் இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது.

படப்பிடிப்பு எதுவும் இல்லாமல் வீட்டில் இருக்கும் இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது. இந்த தகவலை ஒலிவியாவே தனது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். அவர் கூறும்போது,'எனக்கு உடல் வலி, சளி இருமல் ஏற்பட்டது. லேசான காய்ச்சலும் ஏற்பட்டது. பின்னர் காய்ச்சல் அதிகமானது. வாசனை அறியும் திறன் இல்லாமல் போனது. பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அதற்கான சிகிச்சை எடுத்துக் கொண்டதுடன் முழுமையாக ஓய்வு எடுத்துக்கொண்டேன். தற்போது உடல் நிலை பரவாயில்லை. நெஞ்சு பகுதியில் இறுக்கமாகவும் வலியாகவும் உள்ளது. அதுதான் பயமாக இருக்கிறது.. நான் வீட்டிலேயே இருந்ததால் அதிர்ஷ்ட சாலியாக இருக்கிறேன். தொற்று அதிகமாகாமல் காத்துக்கொண்டேன். எதிர்பாராத அசாதாரண சூழலில் வாழ்கிறோம் இதிலிருந்து மீண்டு வருவோம்.

இவ்வாறு ஒலிவியா கூறி உள்ளார்.

You'r reading ஆங்கில, சூப்பர் கேர்ள் நடிகைக்கு கொரோனா வைரஸ்.. நெஞ்சு வலியால் அவதி.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - அஜீத் நடிகைக்கு கொரோனா பாதிப்பா? என்ன நடந்தது?

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்