விளக்கு அணைத்து ஏற்றினால் கொரோனா போய்விடுமா? பிரதமருக்கு குஷ்பு கேள்வி

Actress Kushboo Rise Question Against Modis Announcement

கொரோனா தொற்று பரவாமல் இருக்க ஊரடங்கு பிறப்பித்தார் பிரதமர் மோடி. ஆனால் திடீரென்று மக்களைக் கைதட்டி டாக்டர்களுக்கு நன்றி சொல்லச் சொன்னதும் இடைவெளி என்பதை மறந்து கூட்டமாகக் கைதட்டி சோசியல் டிஸ்டன்சிங் என்பதை மறந்தனர்.


தற்போது கொரோனாவுக்கு எதிரான போரில் ஒற்றுமையாக இருப்பதை வெளிப்படுத்த வரும் ஏப்ரல் 5 இரவு 9 மணிக்கு வீட்டில் மின் விளக்குகளை அணைத்துவிட்டு விளக்கு அல்லது செல்போன் டார்ச் லைட் காட்டச்சொல்லி மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் பிரதமர் மோடி.

இது குறித்து நடிகையும், காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளருமான குஷ்பு டிவிட்டரில் கூறியிருப்பதாவது பிரதமர் நரேந்திர மோடியின் கொள்கைகள் சித்தாந்தங்கள் எனக்குப் பிடிக்காது. இருந்தாலும் நம்முடைய பிரதமர் என்ற வகையில் மரியாதை தருவேன்.தந்திர வேலைகளைச் செய்யாமல் பிரதமர் நரேந்திர மோடி வேறொரு நல்ல யோசனையைத் தந்திருக்கலாம். கொரோனா தொற்றை வீழ்த்துவதற்கு ஒரு கண்டுபிடிப்பாக இதனைச் செய்வதால் (மின் விளக்குகளை அணைப்பதால்) நாம் கொரோனா நோய்த்தொற்றை வீழ்த்தி விடுவோமா?

சமூக இடைவெளிதான் இப்போது முக்கியம். யாரும் வீட்டை விட்டு வெளியே வந்து எதையும் ஏற்ற வேண்டாம். வீட்டிலேயே இருங்கள் தயவுசெய்து கேளுங்கள்.
புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் , தினக் கூலிக்காரர்கள், சிறு மற்றும் குறு தொழில்களைப் பாதுகாக்க யோசனை. இது அறுவடை நேரம் என்பதால் விவசாயிகளுக்கு நிவாரணம். அவர்களின் அறுவடையைக் கொள்முதல் செய்து அதை மக்களுக்குச் சென்று சேர்க்க உதவ வேண்டும். இதற்கான வழிமுறைதான் பிரதமரிடம் எதிர்பார்க்கிறோம்.

இவ்வாறு குஷ்பூ கூறி உள்ளார்.

You'r reading விளக்கு அணைத்து ஏற்றினால் கொரோனா போய்விடுமா? பிரதமருக்கு குஷ்பு கேள்வி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - விளக்கு ஏற்றுவதா? பயமாக இருக்கிறது பிரதமர் உரையால் இயக்குனர் திகில்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்