நடிகரின் கர்ப்பிணி மனைவி மருத்துவ சேவை.. குவியும் பாராட்டு..

Actor Vimals Wife Getting Applause

களவாணி, கலகலப்பு, பசங்க என பல்வேறு படங்களில் நடித்திருப்பவர் விமல். இவரது மனைவி அக்ஷயா. 8 மாத கர்ப்பிணியாக இருக்கும் இவர் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் நர்ஸாக வேலை பார்க்கிறார். நிறை மாத கர்ப்பிணி யாக இருந்தபோதும் அவர் தொடர்ந்து வேலை செய்து வந்ததால் மருத்துவ நிர்வாகமே அவருக்கு விடுமுறை அளித்தது. அவர் விடுப்பில் புறப்பட்டபோது அங்கிருந்த ஊழியர்கள் அவருக்குக் கைதட்டி வாழ்த்துக் கூறி வழி அனுப்பி வைத்தனர்.

ஏற்கெனவே நடிகர் விமல் தனது சொந்த ஊரில் நண்பர்களுடன் சேர்ந்து ஊர் முழுவதும் கிருமி நாசினி தெளித்து சேவையில் ஈடுபட்டது பாராட்டு பெற்றது தற்போது அவரது மனைவி கர்ப்பிணியாக இருந்தும் மருத்துவ சேவையில் ஈடுபட்டது வரவேற்பு பெற்றுள்ளது.

You'r reading நடிகரின் கர்ப்பிணி மனைவி மருத்துவ சேவை.. குவியும் பாராட்டு.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - நாங்கெல்லாம் அப்பவே அப்படி.. மோடி அறிவிப்பு பற்றி கஸ்தூரி..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்