கீர்த்தி சுரேஷுக்கு திருமணமா? அவரே அளித்த பதில்..

Is keerthi Suresh Going To Tie Knot soon

நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழில் விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்தார். திடீரென்று வந்த பாலிவுட் ஆசை அவரை தென்னிந்திய படங்களை ஒதுக்க வைத்தது. அதே நேரம் உடல் குறைத்ததால் அவரை இந்தி பட இயக்குனர் ஒதுக்கி விட்டார்.

அவசர அவசரமாக ரஜினியுடன் அண்ணாத்தே படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார். இந்நிலையில் கீர்த்திக்கு குடும்பத்தினர் திருமணம் செய்ய இருப்பதாகவும் தொழில் அதிபர் ஒருவரை மாப்பிள்ளையாக பார்த்திருப்பதாகவும் தகவல் வெளியானது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து கீர்த்தி சுரேஷ் பதில் அளித்தார்.

அவர் கூறும்போது, ' இதுபோன்ற கிசு கிசு எங்கிருந்து உருவாகிறது என்று எனக்குத் தெரியவில்லை. இதைக் கேள்விப் படும்போது எனக்கே ஆச்சரியமாக உள்ளது. இப்போதைக்குத் திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் எனக்கு இல்லை. இன்னும் திரையுலகில் நீண்ட பயணம் இருக்கிறது' என்றார்.

You'r reading கீர்த்தி சுரேஷுக்கு திருமணமா? அவரே அளித்த பதில்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - அதிகம் தண்ணீர் குடித்தால் உச்சா தான் வரும் பிகில் நடிகை கலகலப்பு..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்