மோடிக்கு கமல்ஹாசன் மனம் திறந்த கடிதம்.. தேசத் துரோகி என்றாலும் பரவாயில்லை..

Kamalhaasan Open Letter To Modi

பிரதமர் மோடிக்குத் திகைத்துப்போன ஒரு இந்தியக் குடிமகனாக மனம் திறந்து இக்கடிதத்தை எழுதுகிறேன். கடந்த மார்ச் 23ம் தேதி நம் நாட்டின் ஹீரோக்கள் யார் என்பதைக் குறிப்பிட்டு கடிதம் அனுப்பியிருந்தேன். அதற்கு அடுத்த நாளே பண மதிப்பிழப்பு போன்று இந்தியா முழுவதும் ஊரடங்கு என்ற அறிவிப்பு வெளியானது. பண மதிப்பிழப்பு அறிவித்த போது முழுமையாக உங்களை நம்பினேன். ஆனால் அது தவறு என்று பின்னர் தெரிந்துகொண்டேன். காலமும் அது தவறான முடிவு என்று உங்களுக்குப் புரிய வைத்தது.

104 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் தற்போதுள்ள சூழலில் உங்களின் வழிகாட்டுதலை கடைப்பிடிக்கிறேன். கைதட்டுகிறார்கள், விளக்கு ஏற்றுகிறார்கள், நாம் சொல்வதை செய்கிறார்கள் என்பதற்காக உங்களுக்கு அடிபணிகிறார்கள் என்று எண்ணக்கூடாது. என்னுடைய பெரிய பயம் என்னவென்றால் பண மதிப்பிழப்பு ஏற்படுத்திய பாதிப்பைவிட இந்த திடீர் ஊரடங்கு ஏற்படுத்தி விடுமோ என்பதுதான்.
பால்கனி வைத்திருக்கும் வீடுகளை மனதில் வைத்தே உங்களது அழைப்புக்கள் அமைந்திருக்கிறது. கூரை கூட இல்லாதவர்கள் எத்தனையோ கோடி பேர் இந்தியாவில் உள்ளனர்.. பால்கனியில் விளக்கு ஏற்றுவதால் அங்குக் கொஞ்சம் எண்ணெய் கரை படியலாம் ஆனால் அடுத்த வேலை அடுப்பு எரிக்கக் கூட எண்ணெய்bஇல்லாதவர்களை நீங்கள் எண்ணிப் பார்க்காதது ஏன்? இப்படிச் சொல்வதால் என்னைத் தேசத் துரோகி என்று கூட கூறலாம் ஆனால் மக்களின் நிலை யை சுட்டிக் காட்டுகிறேன்....... இவ்வாறு பல்வேறு கருத்துக்களைக் கடிதத்தில் அடுக்கியிருக்கும் கமல், 'நாங்கள் உங்கள் மது கோபமாக இருக்கிறோம் ஆனால் இன்னும் உங்கள் பக்கம் இருக்கிறோம்' எனத் தனது கடிதத்தை முடித்திருக்கிறார்.

You'r reading மோடிக்கு கமல்ஹாசன் மனம் திறந்த கடிதம்.. தேசத் துரோகி என்றாலும் பரவாயில்லை.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள், எம்.பிக்களின் சம்பளத்தில் 30 சதவீதம் கட்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்