பாலைவனத்தில் நடிகருடன் தவிக்கும் படக்குழு.. ஷுட்டிங் தடை மீறிச் சென்றதால் சிக்கல்..

Actor Prithviraj Aadujeevitham team stuck in Jordan Desert

கொரோனா தடையையடுத்து படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டன. ஆனாலும் நடிகர் பிருத்விராஜ் 58 பேர் கொண்ட படக்குழுவினருடன் ஜோர்டான் நாட்டுக்கு ஆடு ஜீவிதம் என்ற படத்தின் படப்பிடிப்பு நடத்தச் சென்றார். அங்கும் கொரோனா தொற்று பயம் இருந்ததால் படப்பிடிப்பு நடத்த அனுமதி தரப்படவில்லை. இதையடுத்து இந்திய வெளியுறவு துறை அமைச்சருக்குத் தொடர்பு கொண்டார். உடனே அமைச்சர் அந்நாட்டு அதிகாரிகளுடன் பேசி படப்பிடிப்பு நடத்த அனுமதி பெற்றுத் தந்தார்.

சில நாட்கள் படப்பிடிப்பு நடந்த நிலையில் ஜோர்டானில் கட்டுப்பாடு அதிகரிக்கப்பட்டது. தற்போது படக் குழுவினர் உணவு கிடைக்காமல் தவித்து வருகின்றனர். இது குறித்து பிருத்விராஜ் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது:ஜோர்டானில் மார்ச் 27ம் தேதி ஊரடங்கால் படப் பிடிப்பு தொடர முடியாத நிலை ஏற்பட்டது. பாலை வனப்பகுதியில் வாடி ரம் முகாமிலிருந்து டாக்டர்கள் அடிக்கடி வந்து எங்களுக்கு கொரோனா பரிசோதனை செய்கின்றனர். சரியான உணவு கிடைக்கவில்லை. இந்தியாவிற்குத் திரும்பி வர ஆவலாக இருக்கிறோம். விமானம் தான் இல்லை. எல்லாம் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. எங்களைப் போலவே இன்னும் ஆயிரக் கணக்கான இந்தியர்கள் இங்கு விமானம் கிடைக்காமல் தவிப்பில் இருக்கிறார்கள்

இவ்வாறு பிருத்விராஜ் கூறி உள்ளார்.

You'r reading பாலைவனத்தில் நடிகருடன் தவிக்கும் படக்குழு.. ஷுட்டிங் தடை மீறிச் சென்றதால் சிக்கல்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கொரோனா தடுப்பு பணி.. முதல்வர் நிவாரண நிதியில் ரூ.80 கோடி சேர்ந்தது..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்