நடிகையைச் செத்துப் போகச் சொன்ன நெட்டிஸன்.. பதிலடி தந்து கப்சிப் ஆக்கினார்..

Netizen Trolled Actress Juli

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்கேற்ற ஜூலி பின்னர் கமல்ஹாசன் நடத்திய பிக்பாஸ் போட்டியில் பங்கேற்றுப் பிரபலமானார். தொடர்ந்து படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. மன்னர் வகையறா படத்தில் நடித்தார்.


கொரோனா வைரஸிலிருந்து எப்படிப் பாதுகாப்பாக இருப்பது என்று ஜூலி வீடியோ வெளியிட்டுள்ளார். அதைக்கண்ட நெட்டிஸன் ஒருவர் அவரை ஒருமையில் பேசி, 'நீ நர்ஸ்தானே போய் மக்களுக்குச் சேவை செய்து செத்துப் போகவேண்டியது தானே' என்று காட்டமாகக் கூறி இருந்தார். அதைப் பார்த்து ஷாக் ஆன ஜுலி நெட்டிஸினுக்கு பதிலடி தந்தார்.என்னைச் சாகச் சொல்ல உனக்கு எவ்வளவு தைரியம். இப்படிப் பேசி என்னைக் கொடுமைப்படுத்துவது எவ்வளவு கீழ்த்தரமான குணம்' என ஜூலி கூறி உள்ளார்.

You'r reading நடிகையைச் செத்துப் போகச் சொன்ன நெட்டிஸன்.. பதிலடி தந்து கப்சிப் ஆக்கினார்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பாலைவனத்தில் நடிகருடன் தவிக்கும் படக்குழு.. ஷுட்டிங் தடை மீறிச் சென்றதால் சிக்கல்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்