ரீமிக்ஸ் பாடலுக்கு ரஹ்மான் எதிர்ப்பு.. அனிருத், தமன் சப்போர்ட்..

AR RAHMANS SMASHING REPLY FOR POOR REMIX OF HIS SONG

கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை படங்களுக்கு இசை அமைத்துப் புகழ் பெற்றவர் ஏ.ஆர்.ரஹ்மான். 2009ம் ஆண்டு ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா இயக்கிய இந்தி படத்திற்காக "மசக்காளி 'என்ற பாடல் அமைத்தார். அப்பாடல் ஹிட்டானது.
அதே பாடலை டிப்ஸ் மியூசிக் நிறுவனம் தற்போது ரீமிக்ஸ் செய்து வெளியிட்டது. ஆனால் அதை ரஹ்மான் ரசிக்கவில்லை ரீமிக்ஸ் என்ற பெயரில் பாடலை கெடுத்து விட்டதாக வருத்தப்பட்டிருக்கிறார்.


இது பற்றி ரஹ்மான் டிவிட்டரில் வெளியிட்ட மெசேஜில், '365நாட்கள் உழைப்பு, 200 இசைக்கலைஞர்கள், தூக்கமில்லா இரவுகள் எழுதி, மாற்றி எழுதி எத்தனை முறை திருத்தங்கள். நடிகர்கள், இயக்குனர்கள் குழு, நடனக் கலைஞர்கள் என எவ்வளவு பேரின் உழைப்பு. இதெல்லாம் இல்லாமல் குறுக்கு வழியே நடக்கூடாது. ஒரிஜனல் மசக்காளி பாடலுக்கு ஆதரவு தாருங்கள் 'என்று ரசிகர்களைக் கேட்டுக் கொண்டிருக்கிறார். ரஹ்மானின் இந்த கருத்துக்கு அனிருத், தமன் ஆதரவு தெரிவித்திருக்கின்றனர்.

You'r reading ரீமிக்ஸ் பாடலுக்கு ரஹ்மான் எதிர்ப்பு.. அனிருத், தமன் சப்போர்ட்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - மம்மூட்டி பட இயக்குனர் மகனுக்கு கொரோனா.. தீவிர சிகிக்சை பின் மீண்டார்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்