6 மாடி ஓட்டலை கொரோனா சிகிச்சை மையமாகப் பயன்படுத்தலாம்.. அருந்ததி பட வில்லன் நடிகர் தாராளம்..

Sonu Sood offers his hotel for medical staff amid coronavirus outbreak

கொரோனா பாதிப்பு முடிந்த பாடில்லை. இந்நிலையில் பலருக்குத் தொற்று பரவிய வண்ணம் உள்ளது. அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களும் நர்ஸ்களும் இடைவெளியில்லாமல் பணியாற்றி வருகின்றனர். திரைப்பட நட்சத்திரங்களும் மத்திய மாநில அரசுக்கும் நிதியுதவி அளித்து வருகின்றனர். இன்னும் சிலர் தங்கள் அலுவலகத்தை கொரோனா சிகிச்சைக்குப் பயன்படுத்த அளித்துள்ளனர்.


பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மும்பையில் இருக்கும் தன்னுடைய 4 மாடி அலுவலகத்தை கொரோனா பாதித்தவர்களுக்குச் சிகிச்சை அளிக்கும் இடமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவித்திருந்தார்.அந்த வரிசையில் அருந்ததி, தேவி உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்துள்ள சோனு சூட் மும்பை ஜுஹு பகுதியில் இருக்கும் தனது 6 மாடி ஓட்டல் இடத்தை கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை மையமாகவும், டாக்டர்கள். நர்ஸ்கள் மற்றும் மருத்துவத் துறையினர் தங்குவதற்குப் பயன்படுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவித்திருக்கிறார்.

You'r reading 6 மாடி ஓட்டலை கொரோனா சிகிச்சை மையமாகப் பயன்படுத்தலாம்.. அருந்ததி பட வில்லன் நடிகர் தாராளம்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - அல்லு அர்ஜூனுடன் இணையும் ராஷ்மிகா..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்