தளபதியின் மாஸ்டர் பட ரிலீஸ் ஏமாற்றம்.. ரசிகர்களுடன் சேர்ந்து இயக்குனர் கவலை..

AAdai Director Rathnakumar opens up on Master release disappointment

தளபதி விஜய் நடித்த மாஸ்டர் படத்தை இயக்கி முடித்து விட்டார் லோகேஷ் கனகராஜ். இம்மாதம் ரிலீஸ் ஆக வேண்டிய படம் கொரொனா வைரஸ் பாதிப்பு தொற்றால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு தடை படத்தை ரிலீஸ் செய்ய முடியாத நிலைக்குத் தள்ளியது. இப்படத்தில் கோ டைரக்டராக பணியாற்றியவர் ரத்னகுமார். இவர் ஏற்கெனவே ஆடை,மேயாத மான் படங்களை இயக்கியவர். மாஸ்டர் ரிலீஸ் தள்ளிப்போவது பற்றி தனது ஆதங்கத்தை வெளியிட்டிருக்கிறார்.


அவர் கூறும்போது,”கொரோனா வைரஸ் தொற்று பரவாமலிருந்திருந்தால் மாஸ்டர் படம் இந்நேரம் வெளியாகி இருக்கும். படம் ரிலீஸ் செய்ய முடியாத நிலையில் நிறைய சோகப் பதிவுகளை ரசிகர்களிடமிருந்து காண முடிகிறது. ஒரு ரசிகனாக எனக்கும் வலிக்கிறது. காற்று மாசு, போராட்டம், ரெய்டு இப்போது கொரொனா... எப்படியிருந்தாலும் கடைசியில் நமக்கு வெற்றி சிரிப்பு பரிசாகக் கிடைக்கும் என்றார் ரத்னகுமார்.

You'r reading தளபதியின் மாஸ்டர் பட ரிலீஸ் ஏமாற்றம்.. ரசிகர்களுடன் சேர்ந்து இயக்குனர் கவலை.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - அஜீத் பாடலுக்கு காருக்குள் டான்ஸ் போட்ட நடிகை.. 32வது பிறந்த நாளில் குதுகலம்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்