மாதவனை வியர்த்துக் கொட்ட வைக்கும் பாடல்.. இப்போது நினைத்தாலும் படபடப்பு..

Madhavan reveals his toughest scene

நடிகர் மாதவன் இன்றைக்கு கோலிவுட் கடந்து பாலிவுட்டிலும் நடித்து வருகிறார். தி ராக்கெட்டரி நம்பி எபெக்ட் என்ற படத்தையும் இயக்கி தயாரித்த நடித்து வருகிறார்.
இது இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கை கதையாக உருவாகிறது. ஒரு படத்தை இயக்கும் அளவுக்கு வளர்ந்த போதிலும் இன்றைக்கும் தனது முதல் படமான அலைபாயுதே படத்தில் நடித்த காட்சியை நினைத்தால் வியர்த்துக் கொட்டுகிறதாம். அது என்ன அவரே இதுபற்றி டிவிட்டரில் கூறியதாவது :மணிரத்னம் இயக்கிய
அலைபாயுதே படத்தில் காதல் சடுகுடு என்ற பாடல் முழுவதும் ரிவர்ஸ் ஷாட் முறையில் படமாக்கப்பட்டது. பாடல் வரிகளுக்கு உதட்டசைவு முதல் முகபாவம் நடனம் எல்லாமே ரிவர்ஸில் செய்ய வேண்டும் அதுவும் என்னுடைய முதல் படத்தில். இப்போது நினைத்தாலும் எனக்கு வியர்த்துக்கொட்டுகிறது. இவ்வாறு மாதவன் கூறி உள்ளார்.

You'r reading மாதவனை வியர்த்துக் கொட்ட வைக்கும் பாடல்.. இப்போது நினைத்தாலும் படபடப்பு.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - உலகம் முழுவதும் 20 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்