அழகர்மலை வானரங்களுக்கு உணவளித்த நடிகர்..

abisaravanan feed to azhagarmalai Mankies

இது மதுரைக்கு சித்திரைத் திருவிழா காலம் என்பதால் மதுரையும் அழகர்மலையும் மக்கள் வெள்ளத்தால் நிறைந்து இருக்க வேண்டிய காலம். ஆனால் கொரோனாவினால் ஊரடங்கு போடப்பட்டதால் சித்திரைத் திருவிழா கொண்டாட்டம் இந்த வருடம் நிறுத்தப்பட்டுள்ளது.இந்த திருவிழா நிறுத்தம் மக்கள் மகிழ்ச்சியை மட்டும் பாதிக்கவில்லை. மதுரை அழகர் மலையிலும் அங்குச் சுற்றி இருக்கும் வாயில்லா பிராணிகளையும் வாட்டி எடுத்துக் கொண்டு இருக்கிறது. ஆம் .. மதுரை அழகர்மலை வாழ் வானரங்கள் பக்தர்களால் வழங்கப்படும் உணவு வகைகளை மட்டுமே உண்டு பழக்கப் பட்டவை.


கொரோனாவினால் கோயில் நடை அடைப்பு காரணமாக வானரங்கள் பசியால் வாடி வருவதாக அபி சரவணனுக்குத் தகவல் கிடைத்தது. உடனடியாக நடிகர் அபி சரவணன் அவரது நண்பர்கள் பாலகுரு, ராஜ்குமார் ஏகே ரெட்டி மற்றும் ஜெகன் ஆகிடொருடன் இணைந்து பழங்கள் மற்றும் காய்கனிகளுடன் அழகர் மலைக்குச் சென்று அங்கிருக்கும் வானரங்கள், பசு மற்றும் நாய்களுக்கும் உணவளித்தனர்.முன்னதாக ஊரடங்கு காரணமாக மதுரை காக்கை பாடினார் பள்ளியில் பாதுகாக்கப் பட்டு வரும் இருநூறு ஆதரவற்றோர்களுக்கு பிஸ்கெட் பாக்கெட்கள் வழங்கினர். இந்த ஊரடங்கு முடியும் வரை தன் நண்பர்கள் மூலம் இங்கு வாழும் வாயில்லா பிராணிகளுக்கு உணவளிக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் மக்களும் தங்களால் முடிந்த உணவினை தங்கள் பகுதியிலுள்ள வாயில்லா பிராணிகளுக்குப் பாதுகாப்புடன் வழங்குங்கள் எனவும் அபி சரவணன் கேட்டுக் கொண்டார்.

You'r reading அழகர்மலை வானரங்களுக்கு உணவளித்த நடிகர்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - இந்தியாவில் கொரோனா பலி 507 ஆக அதிகரிப்பு.. 15,712 பேருக்கு நோய்த் தொற்று..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்