ldquoபிடர் கொண்ட சிங்கமே பேசு..rdquo வைரமுத்துவின் கவிதையால் உற்சாகமடைந்த கருணாநிதி (வீடியோ)

சென்னை: திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்த கவிஞர் வைரத்து “பிடர் கொண்ட சிங்கமே பேசு..” என்று தனது கவிதையை அவரிடம் வாசித்து மனம் உருக செய்த காட்சி கணத்தை ஏற்படுத்தியது.

தி.மு.க தலைவர் கருணாநிதி வயது முதர்வு காரணமாக தனது கோபாலபுரம் இல்லத்தில் ஓய்வு எடுத்து வருகிறார். சில சமயங்களில் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுவதால் கழுத்தில் டியூப் போடப்பட்டிருக்கிறது. கருணாநிதியிடம் நல்ல முன்னேற்றம் இருப்பதால், விரைவில் அந்த டியூப் எடுத்துவிடப்படும் எனவும் கூறப்பட்டது.

அவர் கடந்துவந்த பாதையை நினைவூட்டும் வகையில் அவ்வப்போது அண்ணா அறிவாலயம், முரசொலி அலுவலகம், மகள் கனிமொழி எம்.பி.,யின் வீட்டிற்கு கருணாநிதியை அழைத்து சென்றனர். இதைதவிர,  அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள், திரையுலகை சேர்ந்தவர்களும் அவரை சந்தித்து செல்கின்றனர்.

இந்நிலையில், திமுக தலைவர் கருணாநிதியை கவிஞர் வைரமுத்து சந்தித்து கவிதை வாசித்த வீடியோ நேற்று வெளியானது. அந்த வீடியோ காட்சியில் கருணாநிதி கையில் வைரமுத்துவின் கவிதை அச்சிடப்பட்ட காகிதம் ஒன்று இருக்கிறது. அப்போது, கருணாநிதிக்கு கைக் கொடுத்த வைரமுத்து பிடர் கொண்ட சிங்கமே பேசு.. என்று தனது கவிதையை வாசிக்க ஆரம்பித்தார். இதனை கேட்ட கருணாநிதி உற்சாகமும், மகிழ்ச்சியும் அடைந்தார். அவருக்கு பிடித்த வரிகள் வரும்போது அவரது முகத்தில் பொலிவு தெரிந்தது.

வைரமுத்து கவிதையை வாசித்து முடித்த பிறகு, கருணாநிதி அவரது காதில் ஏதோ கூறினார். இந்த காட்சி அனைவரையும் நெகிழச் செய்தது.

இதோ அந்த கவிதை வரிகள்.. 

“பிடர் கொண்ட சிங்கமே பேசு... இடர்கொண்ட தமிழர் நாட்டின் இன்னல்கள் தீருதற்கும், படர்கின்ற பழமை வாதம் பசையற்று போவதற்கும், சுடர்கொண்ட தமிழை கொண்டு சூள்கொண்ட கருத்துரைக்க... பிடர் கொண்ட சிங்கமே நீ பேசுவாய் வாய் திறந்து...

யாதொன்றும் கேட்க மாட்டேன்... யாழிசை கேட்க மாட்டேன்... வேதங்கள் கேட்க மாட்டேன்... வேய்ங்குழல் கேட்க மாட்டேன்... தீதொன்று தமிழுக் கென்றால் தீக்கனல் போலெழும்பும் கோதற்ற கலைஞரே... நின் குரல் மட்டும் கேட்க வேண்டும்...”

You'r reading ldquoபிடர் கொண்ட சிங்கமே பேசு..rdquo வைரமுத்துவின் கவிதையால் உற்சாகமடைந்த கருணாநிதி (வீடியோ) Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - டிடிவி தினகரன் தனிக்கட்சி தொடக்கமா? முதலமைச்சரா? - புகழேந்தி அதிரடி பேட்டி

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்