தயாரிப்பாளர் ஜேஎஸ்கேவின் பிரைம் மீடியா.. புதிய படங்கள் பார்க்கலாம்..

JSK Prime Media

தங்கமீன்கள், பரதேசி, இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா போன்ற பல்வேறு படங்களைத் தயாரித்ததுடன் பல தேசிய, மாநில விருது பெற்ற படங்களை தயாரித்திருக்கிறார். 2006 முதல் திரையுலகில் விறுவிறுப்பாகச் செயல்பட்டு தனக்கென ஒரு முத்திரையைப் பதித்தவர். திரைப்படங்களிலும் இவர் நடித்திருக்கிறார்.
சிறந்த நடிக - நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களையும் அறிமுகப்படுத்திய இவர். தமிழக அரசியல் என்ற வார இதழையும் நடத்தி வருகிறார். தற்போது ஒரு புதிய செயலியை அறிமுகப்படுத்துகிறார்.

'ஜேஎஸ்கே பிரைம் மீடியா' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய செயலி அரசியல், சினிமா, ஆன்மீகம், பெண்கள், மருத்துவம், தொடர்கதைகள், சிறுகதைகள், கவிதை, கார்ட்டூன் எனப் பல பகுதிகளைத் தன்னகத்தே கொண்டிருக்கும். அதோடு, இந்த புதிய செயலியைப் பயன்படுத்தி, திரைப்படமும் பார்க்க முடியும்.

மேலும், இந்த செயலியைத் தரவிறக்கம் செய்து நிறுவியவுடனேயே சுமார் 500-க்கும் மேற்பட்ட திரைப்படங்களைப் பார்க்கும் வாய்ப்பும் கிடைத்துவிடும். சிறந்த படங்களை, உயர்ந்த தரத்தில் இச்செயலியின் மூலம் வழங்குவதற்காக, தன்முனைப்புடன் செயல்பட்டு வரும் இக்குழுவினர், திரைப்படங்களைப் பகிர்மான அடிப்படையிலும், ஒட்டு மொத்தமாகவும் கையகப்படுத்தும் வேலையிலும் மும்முரம் காட்டி வருகின்றனர். மேலும் இத்தளத்தில் புதிய திரைப்பட வெளியீடுகளையும், தனித்துவமான வெளியீடுகளையும் அரங்கேற்றத்தக்க வகையில், பணியாற்றி வருகின்றனர்.

வருகின்ற ஜூன் மாதத்தில் இந்த செயலியை நீங்கள் அமேசான் ஃபயர், கூகுள் பிளே, ஆப்பிள் ஐ ஸ்டார், மற்றும் விண்டோஸ் ஆப் ஸ்டோர்களிலும் இருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

You'r reading தயாரிப்பாளர் ஜேஎஸ்கேவின் பிரைம் மீடியா.. புதிய படங்கள் பார்க்கலாம்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ரேஸ் பைக் ஓட்டும் மாளவிகா மோகனன்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்