விஜய்சேதுபதி பெயரில் போலியாக மெசேஜ் .. ஜோதிகாவுக்கு ஆதரவு தெரிவித்தது யார்?

Vijay Sethupathis Fake Account Supports Jyothika

சமீபத்தில் நடிகை ஜோதிகா ஒரு விழாவில் பேசும்போது தஞ்சை பெரிய கோவிலைப் பற்றி தவறாகப் பேசியதாகச் செய்திகள் வெளியானது. ஆனால் ஜோதிகா அப்படிப் பேசவில்லை கோவில்களுக்குப் பதில் மருத்துவமனைகள் கட்டலாம் என்று பேசியதாக விளக்கம் அளிக்கப்பட்டது.ஜோதிகாவின் பேச்சுக்கு நடிகர் விஜய்சேதுபதி ஆதரவு தெரிவித்து டிவிட் போட்டதாக ஒரு மெசேஜ் வெளியானது.

அதில், ஜோதிகாவின் துணிவான பேச்சுக்குப் பாராட்டுக்கள். அவர்களுக்கு ஏதாவது பிரச்சனை என்றால் சக நடிகனாக முதல் ஆளாக இருப்பேன். மனிதன் தான் மனிதனைக் காப்பற்ற வேண்டும் கடவுளால் வேடிக்கைதான் பார்க்க முடியும். கோவில்கள் விரைவில் மருத்துவமனைகளாக மாறும் காலம் நெருங்கிவிட்டது என அவர் கூறியதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.ஆனால் இது போலியான மெசேஜ் என்று விஜய்சேதுபதி தெரிவித்திருக்கிறார். யாரோ விஜய் சேதுபதியின் டிவிட்டர் பக்ககத்தைப் போட்டோ ஷாப் செய்து இப்படியொரு மெசேஜை பரப்பியதாகத் தெரிகிறது.

You'r reading விஜய்சேதுபதி பெயரில் போலியாக மெசேஜ் .. ஜோதிகாவுக்கு ஆதரவு தெரிவித்தது யார்? Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - மக்கள் செல்வனை இயக்கும் கிராமத்து நாயகன்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்