நடிகை கால் எலும்பு முறிவு..

actress DD leg fracture

லாக் டவுனில் மாவு கட்டுடன் பதிவு வெளியிட்டார்.. எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. விஜய் டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றியிருந்தவர் பிறகு திரைப்படங்களில் நடிக்க வந்தார். ஜூலி கணபதி, விசில், சரோஜா, பவர் பாண்டி போன்ற படங்களில் நடித்திருக்கிறார். இவர் தனது இணைய தள பக்கத்தில் இடது காலில் மாவு கட்டு போட்டுக் கொண்டு கம்பியைத் தாங்கிப்பிடித்தபடி புகைப்படம் வெளியிட்டிருக்கிறார்.


இதுபற்றி டிடி கூறும்போது,லாக்டவுன் முடியும் நாளில் இப்படி நடந்திருக்கிறது. எனது இடது கால் விரலில் முறிவு ஏற்பட்டது, உடனடியாக டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். அதிலிருந்து மெல்ல மீண்டு வருகிறேன். என்னுடன் நிறைபேர் லைவ் சாட் நடத்தக் கேட்டபோது மறுத்தேன் அதற்கு இதுதான் காரணம். கொஞ்சம் பலம் பெற்று இந்த தகவலை வெளியிட்டிருக்கிறேன். சீக்கிரமே மீண்டு உங்களைச் சந்திக்கிறேன் எனத் தெரிவித்திருக்கிறார்.

You'r reading நடிகை கால் எலும்பு முறிவு.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சென்னை, கோவை, மதுரையில் நாளை ஊரடங்கு தளர்வு.. மாலை வரை கடைகள் திறப்பு..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்