அமேசான் பிரைமிலிருந்து ரஜினியின் படையப்பா நீக்கம்.. காரணம் என்ன தெரியுமா?

Why was Padayappa removed from Amazon Prime

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பிளாக்பஸ்டர் படங்களில் படையப்பா படமும் ஒன்று. இதில் நடிகர் திலகம் சிவாஜி முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். ரம்யா கிருஷ்ணன், சவுந்தர்யா, லட்சுமி எனப் பலர் நடித்திருந்தனர்.இப்படம் திடீரென்று அமேசான் பிரைம் ஒ டி டி தளத்தில் வெளியானது. அதைக்கண்டு குஷியான ரசிகர்கள் படத்திலிருந்து சில காட்சிகளை நெட்டில் பகிர்ந்தனர். அதைக்கண்டு ரஜினி தரப்பினர் அதிர்ச்சி அடைந்தனர்.


படையப்பா படத்தை ரஜினியின் அருணாச்சல கிரியேஷன் தயாரித்திருந்தது. ஆனால் தங்களிடம் அனுமதி பெறாமல் படத்தை ஒ டி டி தளத்தில் வெளியிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து ஒ டி டி தளத்திலிருந்து அப்படம் நீக்கப்பட்டது. முறைப்படி விலை நிர்ணயித்து அருணாச்சல நிறுவனத்திடம் அனுமதி வாங்கினால் மீண்டும் ஒ டி டி தளத்தில் இப்படத்தை ரசிகர்கள் பார்க்க முடியும் என்று கூறப்படுகிறது.

You'r reading அமேசான் பிரைமிலிருந்து ரஜினியின் படையப்பா நீக்கம்.. காரணம் என்ன தெரியுமா? Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - தினமும் 32 முட்டை சாப்பிட்ட கமல்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்