விஜய் நடிக்கும் துப்பாக்கி 2ம் பாகம் கேமராமேன் சூசக தகவல்.. தளபதி 65 அப்டேட்..

Thuppakki 2 confirmation given by Santhosh Sivan?

விஜய் நடிக்க 2012ம் ஆண்டு திரைக்கு வந்த படம் துப்பாக்கி. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி இருந்தார். சந்தோஷ்சிவன் ஒளிப்பதிவு செய்தார். காஜல் அகர்வால் ஹீரோயினாக நடித்தார். இப்படம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது. இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவிருப்பதாகச் சமீபகாலமாகத் தகவல் வந்த வண்ணம் உள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளதாகவும் இதுகுறித்து ஏ.ஆர்.முருகதாஸிடம் பேசப் பட்டதாகவும் கூறப்பட்டது. ஆனால் இது இருதரப்பிலும் உறுதி செய்யப்படவில்லை. இதற்கிடையில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் படம் முடிந்து திரைக்கு வரத் தயாராக இருக்கிறது. கொரோனா ஊரடங்கால் தியேட்டர்கள் திறக்கப்படாமல் உள்ளதால் அப்படம் வெளிவரும் தேதி பற்றி உறுதியாகவில்லை .


இந்நிலையில் துப்பாக்கி பட கேமிராமேன் சந்தோஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஜய்யின் துப்பாக்கி பட ஸ்டில்களை வெளியிட்டுள்ளார். ஆனால் அதற்கு எந்த விளக்கமும் தரவில்லை. துப்பாக்கி 2ம் பாகம் உருவாகவுள்ளதைத்தான் இவ்வாறு சந்தோஷ்சிவன் சூசகமாக தெரிவித்திருக்கிறார் என்று கூறப்படுகிறது. அநேகமாக விஜய் பிறந்ததினமான ஜூன் 22ம் தேதி துப்பாக்கி 2ம் பாகம் பற்றிய அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது விஜய்யின் 65 படமாக இருக்கும்.

You'r reading விஜய் நடிக்கும் துப்பாக்கி 2ம் பாகம் கேமராமேன் சூசக தகவல்.. தளபதி 65 அப்டேட்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரை மணக்கிறாரா தமன்னா? ஜோடியாக இருக்கும் படம் வெளியானதால் பரபரப்பு..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்