காதலியை சந்தித்தது எப்போது? விஷ்ணுவிஷால் ஓபன் டாக்..

vishnu vishal first meeting with his love jwala katta

நடிகர் விஷ்ணு விஷால் ராட்சஷசன் பட வெற்றிக்குப் பிறகு பிசியாக இருக்கிறார். தற்போது மோகன்தாஸ் காடன், எப் ஐ ஆர் படங் களில் நடித்து வருகிறார். கொரோனா ஊரடங்கால் வீட்டிலிருந்தாலும் இணையதளம் மூலம் ரசிகர்களுடன் தொடர்பில் இருக்கிறார். அவரிடம் ரசிகர் ஒருவர், 'உங்கள் காதலி பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவை முதன்முறையாக எப்போது சந்தித்தீர்கள்? ' என்று கேட்டார். அதற்கு பதில் அளித்த விஷ்ணு, 'நடிகர் விஷாலின் தங்கை திருமண சங்கீத் நிகழ்ச்சியில் தான் முதன்முறை சந்தித்தேன்' என்றார்.விஷ்ணுவும் ஜுவாலாவும் விரைவில் திருமணம் செய்ய முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.

You'r reading காதலியை சந்தித்தது எப்போது? விஷ்ணுவிஷால் ஓபன் டாக்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - மாதவனுக்கு கேர்ள் பிரண்ட் கிடையாதாம்.. அவரே சொல்கிறார்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்