தேனி வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட பாரதிராஜா.. என்ன காரணம்?

director Bharathiraja kept isolated in his Theni House

பிரபல இயக்குனர் பாரதி ராஜா வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டார். கொரோனா தொற்று பரவலால் பலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் இயக்குனர் பாரதிராஜா சென்னையிலிருந்து தேனியில் உள்ள தனது சொந்த ஊரான அல்லி நகருக்குச் சென்றார் மாவட்ட எல்லையில் அவருக்கு கொரோனா தொற்று இருக்கிறதா என்று பரிசோதிக்கப்பட்டது. தொற்று எதுவும் இல்லாததால் அவரை ஊருக்குள் செல்ல அனுமதித்தனர்.


ஆனால் கொரோனா தொற்று பரவல் அதிகம் உள்ள சிவப்பு மண்டலத்திலிருந்து வந்ததால் அவரை வீட்டில் தனிமைபடுத்திக் கொள்ள அறிவுறுத்தி உள்ளனர்.
வீட்டிலேயே பாரதிராஜா தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அதற்காக வீட்டில் தனிமைப்படுத்தல் ஸ்டிக்கரை அதிகாரிகள் ஒட்டி உள்ளனர்.

You'r reading தேனி வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட பாரதிராஜா.. என்ன காரணம்? Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - காதலியை சந்தித்தது எப்போது? விஷ்ணுவிஷால் ஓபன் டாக்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்