ஸ்ரீதேவி 2வது மகளை கிண்டல் செய்யும் ரசிகர்கள்.. குஷியின் வேதனை யாருக்கு புரியும்..

The Biggest Struggle Of Sridevis Younger Daughter?

கனவு தேவதை என்று ரசிகர்களால் வர்ணிக்கப்பட்டவர் ஸ்ரீதேவி. இவரது மகள்கள் ஜான்வி, குஷி. ஜான்வி ஏற்கனவே சினிமாவில் அறிமுகமாகி நடித்து வருகிறார். குஷி தற்போது கல்லூரி படிப்பைத் தொடர்ந்து வருகிறார்.ஜான்வி, குஷி இருவரையும் ஸ்ரீதேவியுடன் ஒப்பிட்டு அவர்களது அழகைக் குறை சொல்கின்றனர். அந்த வகையில் ஜான்வி எஸ்கேப் ஆகி தன்னை ஒரு நடிகையாக நிலைநிறுத்தி இருக்கிறார். இதில் சிக்கிக்கொண்டவர் குஷிதான்.

இதுபற்றி அவர் கூறும்போது, ஸ்ரீதேவிபோலவோ, ஜான்வி போலவோ நீங்கள் அழகாக இல்லையே ஏன்? சிறுவயது முதல் கல்லூரி வரை கிண்டல் பேச்சு என்னைத் துரத்தியது. முதலில் அதைக்கண்டு நொந்துபோனேன். பிறகு அந்த நபர்களை எப்படித் தவிர்ப்பது என்பதைத் தெரிந்துகொண்டேன் என்றார் குஷி.குஷியும் இன்னும் ஓரிரு வருடங்களில் சினிமாவில் நடிக்க வந்துவிடுவார். தற்போது அவர் நியூயார்க்கில் நடிப்பு பயிற்சி கல்லூரியில் படித்து வருகிறார்.

You'r reading ஸ்ரீதேவி 2வது மகளை கிண்டல் செய்யும் ரசிகர்கள்.. குஷியின் வேதனை யாருக்கு புரியும்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - அம்பன் புயல் தீவிரம்.. ஒடிசாவில் முகாம்களில் ஒரு லட்சம் பேர் தஞ்சம்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்