பாக்யராஜ் ஆகிறார் சசிகுமார்.. முருங்கைகாய் கதை ரீமேக்கில் நடிக்கிறார்..

MUNTHANAI MUDICHU ALL SET FOR A REMAKE

1983ம் ஆண்டு கே.பாக்யராஜ் இயக்கம், நடிப்பில் திரைக்கு வந்து சூப்பர் ஹிட் ஆன படம் முந்தானை முடிச்சு. இதில் ஊர்வசி ஹீரோயினாக நடித்திருந்தார். இப்படத்தில் வரும் முருங்கைக்காய் காட்சி இன்றளவும் பேசப்படுகிறது. இப்படம் ரீமேக் செய்ய முடிவு செய்யப்பட்டிருக்கிறது.


பாக்யராஜ் ஏற்று நடித்த வேடத்தில் சசிகுமார் நடிக்க, பாலாஜி டைரக்டு செய்ய உள்ளார். இதில் நடிக்கும் பிற நடிகர்கள் பற்றி பேச்சு நடக்கிறது. லாக்டவுனுக்கு பிறகு இதுபற்றி அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.முந்தானைமுடிச்சி கதைக் கருவை மட்டும் எடுத்துக்கொண்டு இந்த காலகட்டத்திற்கு ஏற்ப மாற்றி இப்படம் உருவாக்கப்படவிருக்கிறது.

You'r reading பாக்யராஜ் ஆகிறார் சசிகுமார்.. முருங்கைகாய் கதை ரீமேக்கில் நடிக்கிறார்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - வலிமை பட தயாரிப்பாளர் வீட்டுக்குள் நுழைந்த கோவிட் 19..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்