கொரோனாவிலும் இயங்கும் ஒபன் தியேட்டர்.. ஒரு டிக்கெட் 3700 ரூபாய்..

Drive In Cinemas In Dubai During Ongoing Outbreak

தியேட்டருக்குபோனோமா சூப்பர் ஸ்டார், உலகநாயகன், தளபதி, தல படத்தைப் பார்த்து விசிலடிச்சோமா என்றிருந்த ரசிகர்களின் சுதந்திரம் மலையேறி 50 நாளுக்குமேல் ஆச்சு. கொரோனா பீதியில் இன்னும் தமிழகத்தில் சினிமா தியேட்டர்கள் மூடிக்கிடக்கின்றன.

சர்ரென்று காரில் பறந்தோமா படத்தைப் பார்த்தோமா என்று கொரோனாவிலும் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள் துபாய் வாசிகள்.

உலகிலேயே மிகப்பெரிய வர்த்தக மால் துபாயில் உள்ளது. அதன் மொட்டை மாடியில் நவீன வசதிகளுடன் ஓபன் டிரைவ் இன் தியேட்டர் உள்ளது. 75 கார்கள் வரை நிறுத்திவிட்டு காரில் அமர்ந்தபடியே படத்தைப் பார்க்கலாம். ஒரு டிக்கெட் விலை நம்மூர் கணக்குப்படி 3780 ரூபாய். ஒரு காருக்குள் இருவர் மட்டுமே அனுமதி. டிக்கெட் விலையிலேயே பாப்கார்ன், ஸ்நாக்ஸ் மற்றும் டிரிங்க்ஸ் சப்ளை செய்யப்படும். 3 முதல் 12 வயதுள்ளவர்கள் 60 பேருக்கு மேல் அனுமதி கிடையாது.

You'r reading கொரோனாவிலும் இயங்கும் ஒபன் தியேட்டர்.. ஒரு டிக்கெட் 3700 ரூபாய்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - லிங்குசாமி தயாரிக்கும் நான்தான் சிவா ரேணிகுண்டா இயக்குநர் டைரக்‌ஷன்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்